பொது செய்தி

தமிழ்நாடு

மகள் தீயில் கருகி பலி மருமகன் மீது தாய் புகார்

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செஞ்சி: மகளை கணவர், குடும்பத்தினர் தீவைத்து எரித்து கொலை செய்து விட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.செஞ்சி அடுத்த பள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் வெங்கடேசன்,25; இவருக்கும் வந்தவாசி அடுத்த ஜம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் பரமேஸ்வரி,21; என்பவருக்கும் கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாய்ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை

செஞ்சி: மகளை கணவர், குடும்பத்தினர் தீவைத்து எரித்து கொலை செய்து விட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

செஞ்சி அடுத்த பள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் வெங்கடேசன்,25; இவருக்கும் வந்தவாசி அடுத்த ஜம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் பரமேஸ்வரி,21; என்பவருக்கும் கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாய்ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், பரமேஸ்வரி, தனது தந்தைக்கு போன் செய்து, வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறினார்.இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு பரமேஸ்வரி வீட்டில் இருந்து தீயில் எரிந்தபடி வெளியே ஓடி வந்து விழுந்து இறந்தார்.

இதுகுறித்து பரமேஸ்வரின் தாய் செல்வி,45; தனது மகளை அவரது கணவர் வெங்கடேசன், மாமியார் ராணி, மைத்துனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டதாக செஞ்சி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இதுகுறித்து விசாரணை நடத்த திண்டிவனம் சப் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202113:18:18 IST Report Abuse
chandran, pudhucherry . கொடுமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X