பொது செய்தி

இந்தியா

முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன் கொரோனாவால் உயிரிழப்பு

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: பீகாரைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். பீகார் மாநில, ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி.,) கட்சியின் முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக திஹார் சிறைத் துறை அதிகாரி சந்தீப்

புதுடில்லி: பீகாரைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.



latest tamil news



பீகார் மாநில, ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி.,) கட்சியின் முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக திஹார் சிறைத் துறை அதிகாரி சந்தீப் கோயல் தெரிவித்தார்.


latest tamil news



இதையடுத்து முகமது ஷஹாபுதீன், புதுடில்லியில் உள்ள டி.டி.யு., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஷஹாபுதீன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரை எல்.என்.ஜே.பி., மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நிலவரப்படி, திஹார் சிறையில் 227 சிறை கைதிகளுக்கும், சிறை ஊழியர்களில் 60 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் அதில் நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், திஹார் சிறை துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jothi - Thiruvananthapuram,இஸ்ல் ஆப் மேன்
01-மே-202119:34:57 IST Report Abuse
Jothi J
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
01-மே-202118:09:49 IST Report Abuse
Rajasekaran கடவுள், இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட , இதுவரை பாதிக்கப்படாமல் நலமாக இருக்கும் அனைவருக்குமே ஒரு பெரிய , நல்வாழ்க்கைக்கு இன்றியமையாத , அவரே மாற்றவும் விரும்பாத, சில அறிவுரைகளை வழங்கி வருகிறார் அவை என்ன என்று அவரவர் மனதிற்கு நிச்சயம் தெரியும் . அவற்றின்படி ஒவ்வொருவரும் ,சிறிதளவும் பிறழாமல் நடந்து கொண்டால் , அனைவரும் எப்போதும் நலமாகவும் , மகிழ்ச்சியாகவும் வாழ வழி பிறக்கும்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-மே-202117:29:16 IST Report Abuse
Rasheel மிக பெரிய அமைதி மார்க்க வழியில் செல்லும் கொடுங்கோலன். செய்த வினை அவனை கொண்டு பொய் விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X