பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும்: மத்திய அரசு

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரி இருந்த நிலையில், இன்னும் 2 வாரத்தில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. மே 1-ம் தேதி (இன்று) முதல் 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி
CovidVaccine, Tamilnadu, Centre, கொரோனா, தடுப்பூசி, தமிழகம், மத்திய அரசு

புதுடில்லி: தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரி இருந்த நிலையில், இன்னும் 2 வாரத்தில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. மே 1-ம் தேதி (இன்று) முதல் 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக்கூறி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படவில்லை என அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது.


latest tamil news



இந்நிலையில், இன்னும் 2 வாரங்களில் தமிழகத்திற்கு 7.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 1.5 கோடி தடுப்பூசிகள் கேட்டிருந்த நிலையில், மிகக்குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்புவதாக மத்திய அரசு கூறியது ஏமாற்றம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இன்னும் தமிழக அரசு துவக்காத நிலையில், குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி கிடைப்பதால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Chennai,இந்தியா
01-மே-202121:00:44 IST Report Abuse
Rajasekaran ஜனத்தொகை மிகுந்த நாட்டில், முதல் அலை ஓய்வதற்கு முன்பே இரண்டாவது , அதி வீரியமுள்ள அலை எதிர் பாராத விதமாக சூறாவளி போல வந்து விட்டது. அறுபது வயதானவர்களுக்கு மேல் ஒரு மத இடைவெளி விட்டு இருமுறை தடுப்பூசி செலுத்த, செய்திருந்த முன்னேற்பாடுகளையெல்லாம் இந்த இரண்டாவது அலை தவிடு பொடியாக்கி விட்டது . நம் தேசத்தில் ஊருக்கு ஒரு தடுப்பூசி தயாரிப்பு இருந்தால் கூட , இந்த அளவு பரவிவரும் தொற்றை சமாளிப்பது மிகக்கடினம் . தற்போது இருப்பதோ இரண்டு தயாரிப்பு நிறுவனர். அவர்களும் (ஐம்பது சதவிகித தொழிலாளர்களுடன்) ஓய்வின்றி இயங்கினாலும் எல்லா மாநிலங்களின் தேவையை விரைந்து ஒரே சமயத்தில் பூர்த்தி செய்ய முடியும் ? வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதிலும், மக்களுடைய நம்பகத்தன்மை தொடங்கி பல்வேறு விதமான இடையூறுகள் இந்த இக்கட்டான நிலையில் , நாம் பீதிக்கும் இடம் கொடாமல் , பொறுமையும் காத்து, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து, தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர வேறு வழியில்லை அரசும் போர்க்கால அடிப்படையில் மருந்து தயாரிப்பு, இறக்குமதி , விநியோகம் இவற்றை இன்னும் ஒழுங்கு படுத்த வேண்டும். அதுவரை கடவுளிடம் நிரந்தர நிவாரணம் வேண்டி பிரார்த்தனை ஒன்றே நாம் செய்யக்கூடியது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-மே-202120:20:06 IST Report Abuse
vbs manian ஊசி தேவை உற்பத்திக்கு மேல் உள்ளது. அமெரிக்கா மூலப்பொருட்களின் மீதான தடையை இப்போதுதான் நீக்கியுள்ளது.ஊசி தட்டுப்பாட்டை நீக்க பீஸிர் மாடெர்னா ஊசிகளை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
01-மே-202118:31:53 IST Report Abuse
Loganathan Kuttuva தடுப்பூசிகள் வீணாவது தடுக்கப்படவேண்டும் .திட்டமிடுதல் மிக முக்கியம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X