சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து: 'பைஸர் - பயான்டெக்' காத்திருப்பு

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
நியூயார்க்: சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை, ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் பைஸர் - பயான்டெக் நிறுவனம் கோரியுள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது.

நியூயார்க்: சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை, ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் பைஸர் - பயான்டெக் நிறுவனம் கோரியுள்ளது.



latest tamil news



உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.


latest tamil news



இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'பைஸர்- பயான்டெக்' நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் நிறுவனம் 12 முதல் 15 வயது வரையுள்ள 2,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி சோதனை நடத்தியது. இதில் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த சோதனை முடிவை ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாளர்கள் அமைப்பிடம் வழங்கியுள்ளோம்.


latest tamil news



எங்கள் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அடுத்த இரண்டு வருடத்திற்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்வழியாக கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கான முயற்சியில் பைஸர் நிறுவனம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
02-மே-202105:50:15 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே விளையாட்டு வேண்டாம் பைஸர்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-மே-202114:39:20 IST Report Abuse
தமிழவேல் 45 000 பைசர் டோஸ்கள் வரவழைத்தோமே...... அவை என்னவானது என்று யாருக்காவது தெரியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X