உ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஓட்டு எண்ணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: உ.பி. மாநிலத்தில் நாளை நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வந்த பின் வெற்றி பேரணிகளுக்க அனுமதி கிடையாது. கொரோனா தெற்று நெறிமுறைகளை பின்பற்றபடுவதை மூத்த அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். அனைத்து ஓட்டு எண்ணும் பையங்களிலும் சிசிடிவி

புதுடில்லி: உ.பி. மாநிலத்தில் நாளை நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



latest tamil news



மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வந்த பின் வெற்றி பேரணிகளுக்க அனுமதி கிடையாது. கொரோனா தெற்று நெறிமுறைகளை பின்பற்றபடுவதை மூத்த அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். அனைத்து ஓட்டு எண்ணும் பையங்களிலும் சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news



முன்னதாக, ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், நாங்கள் பணி செய்ய விரும்பவில்லை என்றும் நான்கு கட்ட ஓட்டுப்பதிவின்போது 700 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கொரோனா தொற்று நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என உறுதியளித்தது. மொத்தம் 829 ஓட்டு எண்ணும் மையங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாளை ஓட்டு எண்ணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஏதேனும் தவறு நடந்தால், பணியில் இருக்கும் மூத்த அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
01-மே-202116:47:06 IST Report Abuse
sankaseshan அனுமதி அளித்த நங்கள் பொறுப்பேற்க மாட்டோம் , உச்ச நீதி மன்றம்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
01-மே-202115:27:42 IST Report Abuse
GMM நீதிமன்றம் அனைத்து அரசு/தனியார் துறையை தன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது? அரசியல்வாதிகள் பலன் தரும் நிர்வாக நடவடிக்கையை தன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறார்கள். மத்தளத்திற்கு (கொட்டு/நிர்வாகம்) இரு பக்கமும் அடி. நிர்வாக விதி முறைகளை பின்பற்றி வேலை செய்ய முடியாத நிலையில் மக்களுக்கு ஊழலில் இருந்து விடிவு இல்லை. உண்மையில் அதிக அதிகாரம் ஆரம்பத்தில் வருவாய் ஈட்டும் PWD. அதன் பின் மாவட்ட ஆட்சியர். அதன் பின் மக்கள் பிரதிநிதிகள். தற்போது நீதிமன்றம்(வழக்கறிஞர்கள்).
Rate this:
Cancel
Venkatesan.v - Chennai,இந்தியா
01-மே-202115:15:20 IST Report Abuse
Venkatesan.v அருமையான முடிவு, எவன் செத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து இந்த முடிவு. உருப்பட போவதில்லை 😭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X