சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகநூலில் பெண்களிடம் பழகி நகை பறித்த வாலிபர்கள் கைது!

Added : மே 01, 2021
Share
Advertisement
முகநுாலில் நட்பாக பழகி 9-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சங்கராபுரம் வட்டம் கடுவனுார் கிராமத்தை சேர்ந்த உமைபாலன் மனைவி பாலின் ராணி, 27. இவர் கடுவனுாரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவரது முகநுால் மற்றும் வாட்ஸ் ஆப் முலம் ஆண் ஒருவர் நண்பராக பழகி வந்தார். பின், பாலின் ராணியை
முகநூலில் பெண்களிடம் பழகி நகை பறித்த வாலிபர்கள் கைது!

முகநுாலில் நட்பாக பழகி 9-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சங்கராபுரம் வட்டம் கடுவனுார் கிராமத்தை சேர்ந்த உமைபாலன் மனைவி பாலின் ராணி, 27. இவர் கடுவனுாரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவரது முகநுால் மற்றும் வாட்ஸ் ஆப் முலம் ஆண் ஒருவர் நண்பராக பழகி வந்தார். பின், பாலின் ராணியை நேரில் பார்க்க அவரது ஜவுளிக் கடைக்கு வந்துள்ளார்.

நகை அபேஸ்

அப்போது பாலின் ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பார்த்துவிட்டு தருவதாக கூறியதின் பேரில் பாலின் ராணி தங்க செயினை கழற்றி கொடுத்துள்ளார். அச்சமயம் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்ததால் பாலின் ராணியின் கவனம் வியாபாரத்தின் மீது திரும்பியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த நபர் நைசாக கடையிலிருந்து வெளியேறி வாசலில் நின்றிருந்த காரில் தப்பினார். இது குறித்து பாலின்ராணி சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார்.

தனிப்படை அமைப்பு

குற்றவாளியை பிடிப்பதற்காக டி.எஸ்.பி. ராஜூ, சப் இன்ஸ்பெக்டர்கள் திருமால், அன்பழகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் பிரிவு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி விசாரணை செய்தனர். இதில் காரில் இருந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த விசுவாச குமார் மகன் மனோஜ்குமார் 27, அதே ஊரை சேர்ந்த ராசேந்திரன் மகன் கவுதம், 27; என தெரிய வந்தது.

பணம் பறிப்பு

இவர்கள் பாலின் ராணியிடம் செயினை பறித்து சென்றதும், திருவண்ணாமலை மாவட்டம் தேனி , மதுரை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட பெண்களிடம் வாட்ஸ் ஆப், முகநுால் மூலம் பழகி, அவர்களை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். சிலரிடம் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மனோஜ்குமார், கவுதம் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாலரை பவுன் நகை, ஒரு கார், ரூ.2.50 லட்சம் ரொக்கம், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் முகநுால் , வாட்ஸ் ஆப் மூலம் பெண்களிடம் பழகி நகை, பணம் பறித்த கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல் ஹக் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X