பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தற்காலிகமாக ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும்: அமெரிக்க மருத்துவர் யோசனை

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி பவுசி யோசனை தெரிவித்துள்ளார்.இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து, ஆங்கில நாளிதழுக்கு அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரும், பெருந்தொற்று தடுப்பு நிபுணருமான அந்தோணி பவுசி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
Fauci, India, ShutDown, FewWeeks, பவுசி, இந்தியா, ஊரடங்கு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி பவுசி யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து, ஆங்கில நாளிதழுக்கு அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரும், பெருந்தொற்று தடுப்பு நிபுணருமான அந்தோணி பவுசி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்திய அரசு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தற்போது, இந்தியா கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறது. நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடி தேவையாக பெற்று, அதனை விநியோகிக்க வேண்டும்.


latest tamil news



சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, அவர்கள் முழு ஊரடங்கை பிறப்பித்தனர். இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை. பரவலை தடுக்க தற்காலிக ஊரடங்கை பிறப்பித்தாலே போதுமானது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். சீனாவில் மருத்துவ தேவை அதிகரித்த சில நாட்களிலேயே அவர்கள் மருத்துவமனைகள், அவசர மையங்கள் ஆகியவற்றை கட்டி முடித்தனர். அதே வழியை இந்தியா பின்பற்ற வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் மத்திய அரசு அணி திரட்ட வேண்டும். இந்த நேரத்தில் ராணுவத்தின் மூலம் நாம் என்ன உதவியை பெற முடியுமோ அதனை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-மே-202107:59:39 IST Report Abuse
தல புராணம் நல்லது சொல்லி உங்க பேரை கெடுத்துக்காதீங்க ஆப்பீசர்.. செவிடன் காதிலே நீங்க சங்கு ஊதுற மாதிரி.. உங்க மரியாதையை காப்பாத்திக்கணும்ன்னா இந்த மாதிரியான கோமியம் குடிக்கிறவங்களுக்கு அட்வைசங்குற பேரிலே எதுவுமே சொல்லக்கூடாது.. கடிச்சி குதற மட்டுமே தெரியும் இவனுங்களுக்கு.. டிசைன் அப்படி..
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
02-மே-202103:56:28 IST Report Abuse
spr இந்தியா போன்ற 130 கோடி மக்கள் 130 கோடி வழியில் மாறுபட்டு நிற்பவர்கள் நாட்டில் கொரோனா தொற்று காலத்தில் கூட அரசியல் செய்யும் தலைவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் முக்கவசம் போடாமல் தெருவில் அலையும் மக்கள் இருக்கையில் சொல்வது எளிது செய்வது அரிதான ஒன்றே மோடி அரசு இந்த நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை இன்னமும் பல உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் மூலப்பொருட்களுக்கு வெளிநாட்டைச் சார்ந்துதான் இருக்கிறது நமக்கு விஞ்ஞான அறிவும் நுண் கருவிகளும் குறைவே இந்த நிலையில் பிரச்சினை கடுமையான ஒன்றே என்றாலும் சமாளிக்க முடியும் அனைத்த்து தரப்பினரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் முடிந்தால் குறை கூறாமல் என்ன செய்யலாம் என்று ஆக்கபூர்வமாக செயலாற்றலாம் இவ்வளவு பேசும் இவர் தன் நாட்டில் பல லட்சம் மக்கள் இறந்த போது என்ன செய்தார்? இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவே மக்கள் அரசு வழிகாட்டுதலைக் கடைபிடிக்காத இடத்தில் தாக்கம் அதிகமாக இருக்கிறது ஊடகங்கள் 'சென்ஷேஷனல்' செய்திகளை வெளியிடாமல் மக்களுக்கு ஊக்கமூட்டும் விதத்தில் செய்தி வெளியிட வேண்டும்
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
02-மே-202103:55:11 IST Report Abuse
Shroog இந்திய பிரதமருக்கு எதுவும் புரியாது. ஐநா வற்புறுத்தினாலும் , மதத்தை யோசித்து கொண்டிருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X