சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகன் தற்கொலை திருப்பூர் அருகே சோகம்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர்: தந்தை, மகன் பூச்சிகொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.திருப்பூரை அடுத்த எஸ்.பெரியபாளையம், கோழிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன், 51; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா. தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுடன், காளியப்பனின் தந்தை முத்துசாமி, 80 என்பவர் உடனிருந்து வந்தார்.முத்துசாமி, காளியப்பன் ஆகியோர் அடிக்கடி மது

திருப்பூர்: தந்தை, மகன் பூச்சிகொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருப்பூரை அடுத்த எஸ்.பெரியபாளையம், கோழிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன், 51; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா. தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுடன், காளியப்பனின் தந்தை முத்துசாமி, 80 என்பவர் உடனிருந்து வந்தார்.முத்துசாமி, காளியப்பன் ஆகியோர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதன் காரணமாக, குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இருவரையும் மது அருந்த கூடாது என, சகுந்தலா கண்டித்தார். மனமுடைந்த இருவரும், தென்னை மரத்துக்கு வைக்க கூடிய பூச்சிக்கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். அதில், முத்துசாமி வீட்டிலேயே இறந்தார். காளியப்பனை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X