பொது செய்தி

தமிழ்நாடு

பயன்படுத்தி வீசப்படும் முகக்கவசம்: விழிப்புணர்வு இன்றி மக்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், பயன்படுத்தி வீசப்பட்ட முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், திறந்த வெளிகளில் ஆங்காங்கே காணப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க, பலரும், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிகின்றனர்.சிலர் தற்காப்புக்காக

உடுமலை: உடுமலை நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், பயன்படுத்தி வீசப்பட்ட முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், திறந்த வெளிகளில் ஆங்காங்கே காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க, பலரும், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிகின்றனர்.சிலர் தற்காப்புக்காக கையுறைகளையும் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகளை பொது இடங்களில் வீசக்கூடாது. அதனை முறையாக சேகரித்து துாய்மைப்பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், உடுமலை நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பயன்படுத்தி வீசப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள், திறந்தவெளிகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எவரேனும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, பயன்படுத்திய முகக்கவசம் வீசி எறிந்தால், தொற்று பரவும் வாய்ப்புள்ளது என, மக்கள் அச்சப்படுகின்றனர்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'முகக்கவசத்தை பயன்படுத்திய பின்னர் மூடப்பட்ட குப்பைத்தொட்டியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளியில் வீசி எறியப்படுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X