மருத்துவமனைக்கு ஒதுக்கிய ஆக்சிஜனை உரிய நேரத்தில் கொடுங்கள்: டில்லி ஐகோர்ட் கறார்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜனை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும் எனவும், ஆக்சிஜனை கொண்டு வருவதற்கான டேங்கர்களை மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொரோனா 2வது அலை பரவலால் நாடு முழுவதும் அதிகளவு பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் தனியார் மருத்துவமனையான பத்ராவில், சரியான
DelhiHC, Order, Centre, Oxygen, Hospital, டில்லி, உயர்நீதிமன்றம், மத்திய அரசு, ஆக்சிஜன், மருத்துவமனை

புதுடில்லி: மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜனை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும் எனவும், ஆக்சிஜனை கொண்டு வருவதற்கான டேங்கர்களை மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலை பரவலால் நாடு முழுவதும் அதிகளவு பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் தனியார் மருத்துவமனையான பத்ராவில், சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காததால் இன்று (மே 1) பிற்பகல் மருத்துவர் உட்பட 8 நோயாளிகள் இறந்தனர். இதற்கிடையே, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கலான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.


latest tamil news



அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் தான் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். 8 உயிர்கள் பலியாகியுள்ளன. இதையெல்லாம் கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது.நீங்கள் தான் (மத்திய அரசு) டில்லிக்கு அன்றாடம் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். அதைக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு ஆகும். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கொடுக்காதது ஏன்?. மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜனை கொண்டுவருவதற்கான டேங்கர்களையும் மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
02-மே-202105:23:33 IST Report Abuse
Amal Anandan பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்கக்கே முன்னிலை. மற்ற மாநிலங்கள் பற்றிய கவலையே இல்லை.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-மே-202108:01:31 IST Report Abuse
தல புராணம்ஒரே நாடு பூரா சுடுகாடு திட்டம்.....
Rate this:
Cancel
02-மே-202105:08:15 IST Report Abuse
Ganesan Madurai பின்னர் எதுக்குதான் தில்லிக்கு தனி முதல்வர்? விவசாய காலிஸ்தானிகளை தூண்டவா?
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
02-மே-202100:50:07 IST Report Abuse
vns மருத்துவர்கள், செவிலிகள், ஆக்சிஜென் உற்பத்தியாளர்கள், ஆக்சிஜென் எடுத்துச்செல்லும் ஓட்டுனர்கள் இன்னும்பல மனிதர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் சேவை செய்யும்போது, இந்த ஹைகோர்ட் நீதிபதிகள் வீட்டில் இருந்துக்கொண்டே ஒரு அறிவும் இல்லாமல் தங்களுக்கு தெரியாத, தலையிடக்கூடாத, ஒரு விஷயத்தில் உத்தரவு பிறப்பிப்பது நிந்தை செய்ய அருகதையானதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X