'சவுதி அரசின் மாற்றம் வரவேற்கத்தக்கது:' ஈரான்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தெஹரான்: 'சவுதி அரசிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது' என, ஈரான் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதிகளான அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும்

தெஹரான்: 'சவுதி அரசிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது' என, ஈரான் தெரிவித்துள்ளது.



latest tamil news


சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதிகளான அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடித்து வருகிறது.


latest tamil news


இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் ஈரான் - சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.



latest tamil news


இந்நிலையில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத், ''ஈரானுடனான உறவு தொடர்பான சவுதி அரசிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது. இரு நாடுகளும் வேறுபாடுகளைக் கடந்து சமாதானம், ஸ்திரத் தன்மையுடன், பிராந்திய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதுடன் புதிய அத்தியாயத்தில் நுழைய முடியும்,'' எனத் தெரிவித்துள்ளார். இது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
01-மே-202119:14:54 IST Report Abuse
M  Ramachandran என்றைக்குமே இந்த ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் ஒற்றுமையாய் இருப்பதில்லை. பணம் தான் காரணம் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற இறுமாப்பு.
Rate this:
ஒன்றுபட்ட இந்தியன்பணம் அல்ல காரணம், சன்னி ,ஷியா தான் ஆனால் முஸ்லீம் கூட்டத்தில் பிரிவினையே இல்லை என இங்கு(இந்தியாவில்)உள்ளவர்கள் காட்ட முற்படுவார்கள்...
Rate this:
jagan - Chennai,இலங்கை
02-மே-202103:12:01 IST Report Abuse
jaganஎல்லாம் அந்த ஊரு ஜாதி சண்டை தான் (இசுலாத்தில் 79 ஜாதிகள் உண்டு)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X