கண் விழித்து கடமையாற்றுங்கள் அரசுக்கு சோனியா அறிவுறுத்தல்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: காங்., தலைவர் சோனியா, இன்று ஒரு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது:கொரோனா வைரசால் நிலவும் சூழல், மிகவும் மோசமாகி உள்ளது. கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், நாடு தழுவிய ஒரு யுக்தியை, மத்திய அரசு வகுக்க வேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்கள் கடமையை ஆற்ற
 கண் ,விழித்து ,கடமை, அரசு, சோனியா அறிவுறுத்தல்

புதுடில்லி: காங்., தலைவர் சோனியா, இன்று ஒரு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது:கொரோனா வைரசால் நிலவும் சூழல், மிகவும் மோசமாகி உள்ளது.

கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், நாடு தழுவிய ஒரு யுக்தியை, மத்திய அரசு வகுக்க வேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய நேரம் இது. புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தைப் போக்க வேண்டும். இந்த நெருக்கடி நிலை சீராகும் வரை, அவர்களின் வங்கி கணக்குகளில், குறைந்தபட்சம், 6,000 ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும்.


latest tamil news



கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில், ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும். இதை செய்தால் மட்டுமே, மக்களை நாம் காப்பாற்ற முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், மத்திய அரசுக்கு காங்., கட்சி ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
02-மே-202110:41:14 IST Report Abuse
R. Vidya Sagar வாய் கிழிய பேசும் இந்த தலைவர்கள் யாருமே ஏன் மக்களை ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று வற்புருத்தவில்லை? சரி, ஷெல்ப்பில் கொஞ்சம் புத்தகம் காண வில்லை. ராகுல் படிக்க எடுத்துட்டு போய்ட்டாரா?
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
02-மே-202109:56:27 IST Report Abuse
Nallavan Nallavan ஆளும் பாஜக கண்விழித்து கடமையாற்றினால் நீயும் உன் வாரிசுகளும் சிறையில் இருக்க வேண்டிய நிலை வரும் ..... பரவாயில்லையா ????
Rate this:
Cancel
Ramesh - Dubai,இந்தியா
02-மே-202109:02:15 IST Report Abuse
Ramesh நீயும் உன் வாரிசுகளும் வீட்டுக்குள்ளேயே ஜாக்கிரதையாக இருக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X