ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பியது 'யுனிசெப்'

Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
நியூயார்க்:ஐ.நா., சிறார் நல நிதியமான, யுனிசெப், 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா பரிசோதனை பொருட்கள் உள்ளிட்டவற்றை, இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.கொரோனா சவாலை சமாளிக்க, ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. பரிசோதனைஇந்நிலையில், ஐ.நா., துணை செய்தி தொடர்பாளர் பர்ஹன் ஹக் கூறியதாவது:கொரோனா சவாலை சமாளிக்க, 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள்,
 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பியது 'யுனிசெப்'

நியூயார்க்:ஐ.நா., சிறார் நல நிதியமான, யுனிசெப், 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா பரிசோதனை பொருட்கள் உள்ளிட்டவற்றை, இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.

கொரோனா சவாலை சமாளிக்க, ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தியாவுக்கு உதவி வருகின்றன.


பரிசோதனை

இந்நிலையில், ஐ.நா., துணை செய்தி தொடர்பாளர் பர்ஹன் ஹக் கூறியதாவது:கொரோனா சவாலை சமாளிக்க, 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், பரிசோதனைப் பொருட்கள், ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றை, இந்தியாவுக்கு, ஐ.நா., சிறார் நல நிதியம், வழங்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் வட கிழக்கு மாநில மருத்துவமனைகளில், 25 ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் அமைக்க உதவியுள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக வைக்க, பிரத்யேக, 'ரெப்ரிஜிரேட்டர்' சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.


குழந்தைகளுக்கு உதவி

தடுப்பூசி மருந்துகளை பராமரிப்பது, சப்ளை செய்வது உள்ளிட்ட பணிகளையும் யுனிசெப் இந்திய பிரிவு நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 17 மாநிலங்களைச் சேர்ந்த, ஏழை குழந்தைகள் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து கல்வி கற்க, யுனிசெப் உதவி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வால்மார்ட் உதவி

அமெரிக்காவின் 'வால்மார்ட்' நிறுவனம், 20 ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், 20 'கிரையோஜனிக் கன்டெய்னர்கள்' ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்குகிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, தொண்டு நிறுவனங்களுக்கு, 15 கோடி ரூபாய் தருவதாக, வால்மார்ட் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
02-மே-202110:34:08 IST Report Abuse
PR Makudeswaran காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகவே தெரியும்.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
02-மே-202110:32:19 IST Report Abuse
PR Makudeswaran .......
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-மே-202107:56:58 IST Report Abuse
தல புராணம் //'வால்மார்ட்' நிறுவனம், 20 ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், 20 'கிரையோஜனிக் கன்டெய்னர்கள்' ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்குகிறது// சோழியன் குடுமி நல்லாவே ஆடுது .. அது சும்மா ஆடாதும்பாய்ங்க.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. மோடி கேர்ஸ்சுக்கு கப்பம் கட்டினாத்தான் கடை வைக்க முடியும்லா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X