இந்திய வம்சாவளி சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை| Dinamalar

இந்திய வம்சாவளி சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Added : மே 01, 2021
Share
லண்டன்:பிரிட்டன் நீதிமன்றம், இந்திய வம்சாவளி சகோதரர்கள் மூவருக்கு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் ஆக்டன் பகுதியைச் சேர்ந்தவர், ஒஸ்வால்டோ டி. கார்வால்ஹோ, 22. அதே பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமல் சோஹல், 23, குடும்பத்தினருக்கும், ஒஸ்வால்டோவுக்கும் முன்பகை இருந்து வந்தது.இதனால்

லண்டன்:பிரிட்டன் நீதிமன்றம், இந்திய வம்சாவளி சகோதரர்கள் மூவருக்கு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் ஆக்டன் பகுதியைச் சேர்ந்தவர், ஒஸ்வால்டோ டி. கார்வால்ஹோ, 22. அதே பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமல் சோஹல், 23, குடும்பத்தினருக்கும், ஒஸ்வால்டோவுக்கும் முன்பகை இருந்து வந்தது.இதனால் ஆத்திரம்அடைந்த கமல் சோஹல் மற்றும் அவரது சகோதரர்கள் சுக்மிந்தர் சோஹல், 25.மைக்கேல் சோஹல், 28, அவர்களது நண்பர் அன்டோயின் ஜார்ஜ், 24, ஆகியோர், 2019ல், ஒஸ்வால்டோவை கொலை செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதையடுத்து, சகோதரர்கள் மூவருக்கும், நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உத்தரவில், கமல் சோஹல், 22 ஆண்டுகளும், அவரது சகோதரர்கள் இருவரும், தலா, 19 ஆண்டுகளும், சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.கொலைக்கு உதவியாக இருந்த, அவர்களது நண்பர் அன்டோயின் ஜார்ஜுக்கு, ஒன்பது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X