மருத்துவமனையில் தீ: குஜராத்தில் 18 பேர் பலி

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பரூச்:குஜராத்தில், மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோயாளிகள், 18 பேர், உடல் கருகி இறந்தனர்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமை யில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, பரூச் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில், 50க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலையில், நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்தில்
 மருத்துவமனையில் தீ: குஜராத்தில் 18 பேர் பலி

பரூச்:குஜராத்தில், மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோயாளிகள், 18 பேர், உடல் கருகி இறந்தனர்.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமை யில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, பரூச் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில், 50க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலையில், நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகள் அலறி அடித்தபடி, அறையை விட்டு வெளியே ஓடினர்; சிலர் தீயில் சிக்கினர். தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.

அப்போது, ஸ்டிரெச்சர், படுக்கை ஆகியவற்றில் கருகிய நிலையில் கிடந்த, 12 சடலங்கள் மீட்கப்பட்டன.தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி, ஆறு பேர் இறந்தனர்.தீ விபத்தில் இறந்தோரின் உறவினர்கள், மருத்துவமனை முன் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அதைவிட, பல உடல்கள், முழுக்க கருகி விட்டதால், அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
02-மே-202106:49:54 IST Report Abuse
Raman ஹ்ம்ம் இதுதான் குஜராத் மாடலா ? வாயால் வடை மட்டும் நல்ல சுடத்தெரியும்.. பாவப்பட்ட மக்கள் இந்த கொடுமைகளிருந்து எப்போது மீளப்போராங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X