ஆக்சிஜன் பற்றாக்குறையால் டாக்டர் உட்பட 12 பேர் பலி

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் உள்ள மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், டாக்டர் உட்பட 12 பேர், பலியாயினர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிரித்துள்ளதால், டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

புதுடில்லி:டில்லியில் உள்ள மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், டாக்டர் உட்பட 12 பேர், பலியாயினர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிரித்துள்ளதால், டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, டில்லியின் பாத்ரா மருத்துவமனையில், 327 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 48 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.நேற்று பிற்பகலில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போனது. மீண்டும் ஆக்சிஜன் வந்து சேர, ஒரு மணி நேரம் ஆனது. இதனால் ஆக்சிஜன்இல்லாமல், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த, அதே மருத்துவனையின் டாக்டர் ஆர்.கே.ஹிம்தானி, 62, உட்பட, 12 நோயாளிகள் பலியாயினர்; ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையே, 12 பேரின் உயிரிழப்புக்கு காரணம் என, மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.கண்டனம்பாத்ரா மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 12 பேர் பலியான தகவல் அறிந்த டில்லி உயர் நீதிமன்றம், 'ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலியாவதை பார்த்து, கண்களை மூடிக்கொண்டு இருப்போம் என, நினைக்கிறீர்களா' என, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.மேலும், 'டில்லிக்கு நேற்று முதல் தினந்தோறும், 490 டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X