சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பாடம் எடுப்பாரா கார்த்தி சிதம்பரம்?'

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பாடம் எடுப்பாரா கார்த்தி சிதம்பரம்?'சிவகங்கையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழகத்தில், கருத்துக் கணிப்புப்படியே, தேர்தல் முடிவு இருக்கும் என, முழுமையாக நம்ப முடியாது. தி.மு.க., -- காங்., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, 'ஹேக்' செய்து, தவறு நிகழ்த்த வாய்ப்பில்லை. மக்கள் போட்ட ஓட்டுகள்
 பக்க வாத்தியம்


'பாடம் எடுப்பாரா கார்த்தி சிதம்பரம்?'



சிவகங்கையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழகத்தில், கருத்துக் கணிப்புப்படியே, தேர்தல் முடிவு இருக்கும் என, முழுமையாக நம்ப முடியாது. தி.மு.க., -- காங்., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, 'ஹேக்' செய்து, தவறு நிகழ்த்த வாய்ப்பில்லை. மக்கள் போட்ட ஓட்டுகள் அப்படியே இருக்கும்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'இதைத் தானே, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் சொல்லுது... தி.மு.க., கூட்டணிக் கட்சியினருக்கு புரியவே மாட்டேங்குதே... கார்த்தி சிதம்பரம், அவங்களுக்கு பாடம் எடுக்கலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.


உள்குத்து மாதிரி தெரியுதே...!



ஞாயிறு ஊரடங்கு காரணமாக, நாகை மாவட்டம், கீழ்வேளூரில், தன் வீட்டிற்கு தேவையான காய்கறியை, முதியவர் ஒருவர் வாங்கிக் கொண்டிருந்தார்.கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், 'சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை அன்று, 30 மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்கும் என, வானிலை மையம் சொல்லியிருக்கு... இது,
உள்குத்து மாதிரி தெரியுதே...' என்றார்.அதற்கு முதியவர், 'நீங்கள் எல்லாம் சரியான நபருக்கு ஓட்டுப் போட்டிருந்தால், எந்த குத்தும், வேலைக்கு ஆகாது...' என்றபடியே, வெண்டைக் காயை ஒடித்துப் பார்த்தார். கடைக்காரரும், இளைஞரும் அதை ஆமோதித்தனர்.


'இவர் சொல்றது தான் ஒரே வழி!'



கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், புதிய நீதிமன்ற கட்டடத்தை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அவர் பேசுகையில், 'சமுதாயத்தில், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களை பாதுகாக்கக் கூடிய மிகப்பெரிய பொறுப்பு, நம்மிடம் உள்ளது. தீர்ப்பு வழங்கும் போது, நடுநிலையுடன், என்ன காரணத்திற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்கி, தீர்ப்பளிக்க வேண்டும்' என்றார்.
இதைக் குறிப்பெடுத்த மூத்த நிருபர் ஒருவர், 'ஆமாம்... சட்டம், சாமான்யர் மீது தான் பாயுது... அதிகாரம் இருப்போரைக் கண்டால், கூட்டல் கணக்கு கூட தப்பா போடுதுன்னு, நீதித் துறை மேல விமர்சனம் இருக்கு பா... அதை நீக்க, இவர் சொல்றது தான் ஒரே வழி...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-மே-202106:16:11 IST Report Abuse
D.Ambujavalli இது ‘குமாரசாமிகளுக்கு’ மனதில் தோன்றாமலா இருந்திருக்கும்? கண்ணையும், நீதியையும் காந்தி நோட்டுக்காகத் திரை இட்டுக்கொண்டுவிட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X