சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

முள் நாற்காலி!

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
முள் நாற்காலி!'இன்னும் சில ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருக்கலாம்' என, கண்ணீர் வடிக்கிறார், மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான். மத்திய பிரதேசத்தில் கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு, காங்கிரசை விட, சற்று குறைவான தொகுதிகளே கிடைத்தன. இதனால், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதையடுத்து,


 அக்கம் பக்கம்


முள் நாற்காலி!



'இன்னும் சில ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருக்கலாம்' என, கண்ணீர் வடிக்கிறார், மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான். மத்திய பிரதேசத்தில் கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு, காங்கிரசை விட, சற்று குறைவான தொகுதிகளே கிடைத்தன. இதனால், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதையடுத்து, மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்காக, பல அதிரடி வேலைகளை அரங்கேற்றினார், சிவ்ராஜ் சிங் சவுகான். ம.பி., காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவையும், அவரது ஆதரவாளர்களையும் தன் பக்கம் இழுத்தார். ம.பி., காங்கிரஸ், சுக்குநுாறாக உடைந்து சிதறியது. இதை எதிர்பார்த்து காத்திருந்த சவுகான், மீண்டும் முதல்வரானார். ஆனால், அந்த மகிழ்ச்சி, அவருக்கு ரொம்ப நாள் நீடிக்கவில்லை. கொரோனா முதல் அலையில், ம.பி., மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீள்வதற்குள், சவுகானுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. தற்போது, கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை துவங்கியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து பற்றாக்குறை என, புகார்கள் குவிகின்றன. மத்திய அரசிடமிருந்து, கேள்வி மேல் கேள்வி வருவதால், நொந்து போயுள்ளார் சவுகான். 'முதல்வர் நாற்காலி, முள் நாற்காலியாக மாறி விட்டதே' என, புலம்புகிறார்.


எல்லாமே காமெடி தான்!



'எங்கள் தலைவர் பேச்சைக் கேட்டுத் தான், முதல்வரே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவைப் பற்றி பெருமையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள். பீஹாரில் கடந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், 'ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியே வெற்றி பெறும்' என தெரிவித்தன. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார், மீண்டும் முதல்வரானார். மனதுக்குள் முதல்வராகவே தன்னை சித்தரித்து வைத்திருந்த தேஜஸ்வி யாதவ், அந்த சோகத்திலிருந்து நீண்ட நாட்களாக மீண்டு வரவில்லை.
சமீபத்தில், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார், முதல்வர் நிதிஷ் குமார். இதில், சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் தேஜஸ்வி யாதவ். அடுத்த நாள், இந்த ஆலோசனைகளில் பெரும்பாலானவற்றை அமல்படுத்தினார் நிதிஷ் குமார். இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினருக்கு, மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. 'நிதிஷ் குமாருக்கு வயதாகி விட்டது; அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதனால் தான், எங்கள் தலைவர் கூறிய ஆலோசனைகளை அமல்படுத்தியுள்ளார்' என்கின்றனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரோ, 'இதை காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சீரியசாக கருதக் கூடாது' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
02-மே-202113:07:00 IST Report Abuse
r.sundaram எனக்கு நீதிமன்றங்களின் மேல் இருந்த நம்பிக்கை அறவே போய் விட்டது. இரண்டு ஜி வழக்கு, எர் செல் வழக்கு போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வாதிகள் மேல் போடும் வழக்குகள் கூட வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறதோ அப்போது நீதி எங்கிருந்து வரும். ஜெயலலிதாவுக்கு அவர் இறந்த பிறகுதான் வழக்கில் தீர்ப்பு வந்தது, பிரயோஜனம்? ஒரு வழக்கை போட்டால், அதிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று ஒரு வழக்கு போடுவது, அதற்க்கு வாய்தா, பிறகு மேல்முறையீடு, அதற்க்கு வாய்தா, வழக்குகள் எப்போது முடிவது? நீதிமன்றங்களின் மேல் இருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. பணமும் நேரமும் செலவு, தவிர வக்கீகள் பணம் பார்க்க ஒரு வழி அவ்வளவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X