சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழக காங்., தலைவர் அழகிரி: பா.ஜ., அரசின் மோசமான செயல் திட்டங்களை தைரியமாக எதிர்த்து பேசி வருபவர், நடிகர் சித்தார்த். பல நடிகர்கள், தங்கள் படங்கள் உண்டு, வருமானம் உண்டு என இருக்கும் நிலையில், இவர் மட்டும் நேர்மையாகவும், உண்மையாகவும் பல கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தி வருகிறார். அவரை, பா.ஜ., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கண்டித்து வருவது தவறு.'டவுட்' தனபாலு: நீங்கள்

'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் அழகிரி: பா.ஜ., அரசின் மோசமான செயல் திட்டங்களை தைரியமாக எதிர்த்து பேசி வருபவர், நடிகர் சித்தார்த். பல நடிகர்கள், தங்கள் படங்கள் உண்டு, வருமானம் உண்டு என இருக்கும் நிலையில், இவர் மட்டும் நேர்மையாகவும், உண்மையாகவும் பல கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தி வருகிறார். அவரை, பா.ஜ., ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கண்டித்து வருவது தவறு.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் இள நடிகர் நேர்மையானவர் என்றால், சமுதாயத்தில், நாட்டில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும், பாரபட்சமின்றி கண்டிக்க வேண்டும். எந்த கட்சியையும் சாராமல், விருப்பு, வெறுப்பின்றி செயல்பட வேண்டும். ஆனால், அவர் ஒரு கட்சி அல்லது அமைப்பு சார்பாகத் தானே இதுவரை செயல்பட்டு வந்துள்ளார். அதனால் தான், பா.ஜ.,வினர் அவரை சாடுகின்றனரோ என்ற, 'டவுட்' ஏன் உங்களுக்கு வரவில்லை?


கேரளா அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம்
: மருத்துவம் மற்றும் சுகாதார துறையில், ஊழியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. கொரோனா என்பது மருத்துவ சிகிச்சை அமைப்புகளின் வரம்புக்கு மீறிய பெரும் சவாலாக உள்ளது; வேகமாக பரவி வருகிறது. பரிசோதனை செய்யும் நான்கு பேரில், ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்படுகிறது. பொது இடங்களில் மக்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் சங்கிலியை முறியடிக்க, குறைந்தபட்சம் இரு வாரங்களாவது ஊரடங்கு அத்தியாவசியம்.

'டவுட்' தனபாலு: மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற பா.ஜ., ஆளும் மாநிலம் கூட, தொடர்ந்து பல நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், அதிக தொற்றால் தினமும் பாதிக்கப்படும் கேரளா மட்டும், முழு ஊரடங்கு அமல்படுத்துவதில்லை; வார இறுதி நாட்கள் மட்டும் தான் முழு ஊரடங்கு. பிற எல்லா விஷயங்களிலும் பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படும், கேரள கம்யூ., முதல்வர் பினராயி விஜயன், ஊரடங்கு விஷயத்தில் மட்டும் பிரதமர் கூறியதை அப்படியே பின்பற்றுகிறாரோ என்ற, 'டவுட்' வருகிறது!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
: இன்று வரை, 16.33 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், ஒரு கோடி தடுப்பூசிகள் மாநிலங்களில் உள்ளன. அடுத்த, மூன்று நாட்களில் மேலும், 19 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களை சென்றடையும். உலகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், நான்கில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர். இந்தியாவில் தான் தினமும் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன; தட்டுப்பாடு இல்லை.

'டவுட்' தனபாலு: கொரோனா இரண்டாவது அலை வந்த பிறகு, பா.ஜ.,வினர் பாடு தான் ரொம்ப கஷ்டமாகி போய்விட்டது என்பதில், 'டவுட்'டே இல்லை. மத்தியில் ஆளும் கட்சி என்பதால், அனைத்து மாநில அரசுகளும் நெருக்கடி கொடுக்கின்றன; எதிர்க்கட்சிகள் திணற திணற அடிக்கின்றன. அத்தனைக்கும் பிரதமர் வாய் திறப்பதில்லை; பா.ஜ., பிரமுகர்கள் தான் கருத்து தெரிவித்து, அப்போதைக்கு அமைதிப்படுத்துகின்றனர்!


டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:
தடுப்பூசி போட்டுக் கொள்ள தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கிறேன். போதுமான அளவில் தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசிகள் வந்தவுடன், அரசு தரப்பில் முறையான அறிவிப்பு வெளியிடுவோம். அதன்பிறகு, மையங்களுக்கு வந்து தகுதியுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

'டவுட்' தனபாலு: நல்ல நாளிலேயே நீங்கள், நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து, மத்திய அரசுக்கு எதிராக, வீராவேசமாக குரல் கொடுப்பீர்கள். இப்போது, கொரோனா தொற்று காலம். கேட்கவா வேண்டும்... எப்படியோ, இந்த காலத்திலும், மத்திய அரசுக்கு எதிராக, மக்களை கொம்பு சீவி விடுவதை எப்போது தான் எதிர்க்கட்சிகள் நிறுத்தப் போகின்றனவோ என்பதே, இப்போதைய, 'டவுட்' ஆக உள்ளது!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
கட்சியினரும், தொண்டர்களும், சட்டசபைத் தேர்தல் முடிவுகளை, ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள். தேர்தலில் வெற்றி உறுதியானாலும், தேவையின்றி ஒன்றாகக் கூட வேண்டாம்; தெருக்களில் வெற்றியை கொண்டாட வேண்டாம்; வீட்டிற்குள் கொண்டாடுங்கள். கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில், பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம்.

'டவுட்' தனபாலு: கொரோனா பெருந்தொற்றிற்கு கட்சியினர் ஆளாகி விட வேண்டாம் என, இப்போது அழைப்பு விடுக்கும் நீங்கள், சில வாரங்களுக்கு முன் வரை, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, அதிக கூட்டத்தை கூட்டும் பொறுப்பாளர்களை வாழ்த்தினீர்களே... அப்போதும், கொரோனா இருக்கத் தானே செய்தது! அதுபோன்ற செயல்களால் தான், கொரோனா பரவியது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தானோ என்ற, 'டவுட்' வருகிறது!


தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்:
'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து, கொரோனா நோயை குணப்படுத்தும் என, எந்த மருத்துவ வல்லுனரும் கூறவில்லை. அந்த மருந்தை, மருத்துவர் கண்காணிப்பு இன்றி, யாரும் பயன்படுத்தக் கூடாது. அந்த மருந்தை வாங்கி வருமாறு, தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளின் உறவினர்களை நிர்பந்திக்கின்றன. அத்தகைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

'டவுட்' தனபாலு: அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளில், ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோருக்கு, எவ்வித சுணக்கமும் இன்றி, அந்த ஊசி மருந்து வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை. இருந்தாலும், போதிய அளவில் இல்லை. அதனால் தான், அந்த மருத்துவமனைகள் இவ்வாறு செய்கின்றனவோ என்ற, 'டவுட்' எழுகிறது!

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
02-மே-202106:25:20 IST Report Abuse
rajan கொரோனா பரவியது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தானோ என்ற, 'டவுட்' வருகிறது - இந்த கருத்தை உயர் நீதிமன்றம் தெரிவித்தபோது டவுட் தனபாலு என்ன செய்தார் - தேர்தல் ஆணையம் என்ன செய்தது - முழு கட்டுப்படும் தேர்தல் ஆணையத்திடம் இருந்தது என்று டவுட் தனபாலுவுக்கு தெரியவில்லையா என்ற டவுட் மக்களுக்கு இருக்கிறது
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
02-மே-202106:21:41 IST Report Abuse
rajan நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து, - கெஜ்ரிவால் குடிப்பது தண்ணீர்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-மே-202106:10:12 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் பிரசாரங்களில் கட்சிப் பாகுபாடு இன்றிக் கூட்டம் கூட்டி கட்சி பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கம் இருந்தது. நீதிமன்றமே இத்தகைய கூட்டங்களால் தொற்றும், மரணமும் ஏற்பட்டது கொலைக்கு நிகர் என்று கசந்து கூறியபின், இப்போது கொண்டாட்டனக்ளுக்கு பெரிதாக விதிமுறை முன் நேர்ந்த தொற்றுக்கும், மரணங்களுக்கு யார் பொறுப்பு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X