பொது செய்தி

இந்தியா

திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 6,௦௦௦ஆக குறைந்தது

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை, 6,௦௦௦ஆக குறைந்துள்ளது.கொரோனா தொற்றின், இரண்டாம் அலை பரவி வருவதால், நாடு முழுதும் பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானமும், இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்து, 'ஆன்லைன்' வாயிலாக, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கி வருகிறது.ஆன்லைன்
 திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்கள்  எண்ணிக்கை  6,௦௦௦ஆக குறைந்தது

திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை, 6,௦௦௦ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றின், இரண்டாம் அலை பரவி வருவதால், நாடு முழுதும் பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், திருமலை திருப்பதி தேவஸ்தானமும், இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்து, 'ஆன்லைன்' வாயிலாக, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கி வருகிறது.ஆன்லைன் முன்பதிவுதினமும், 15 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைன் முன்பதிவில் வெளியிடப்பட்டன.

ஆனாலும், கொரோனா தொற்று அச்சத்தால், பக்தர்கள் பலர் தங்களின் திருமலை பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, 6,௦௦௦ ஆக குறைந்துள்ளது. பக்தர்களின் வருகை குறைவால், கோடிகளில் இருந்த உண்டியல் காணிக்கை வருமானமும், லட்சங்களுக்கு குறைந்துள்ளது.


வெல்லத்தில் லட்டு

இதற்கிடையில், திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று முதல் இயற்கை முறையில் பசுஞ்சாணத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு, நெய்வேத்தியம் தயார் செய்வதை தேவஸ்தானம் துவக்கியது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி விஜயராம் அளித்த, இயற்கை முறையில் விளைவித்த அரிசி, பருப்பு. காய்கறிகள், நெய், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, நெய்வேத்தியம் தயார் செய்யப்பட்டது.

இதுவரை, வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி செய்து வந்த லட்டு, நேற்று வெல்லத்தால் தயார் செய்யப்பட்டது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலை ஏழுமலையானுக்கு, 100 ஆண்டு காலத்திற்கு முன், இதுபோன்று இயற்கை விவசாய முறையில் தயாரான பொருட்களை கொண்டு, நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. தினசரி உண்ணும் லட்டு பிரசாதத்திற்கும், இந்த லட்டு பிரசாதத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. காலப்போக்கில் நவீன விவசாயத்தால், அனைத்தும் மாற்றப்பட்டது.

தற்போது, மீண்டும் மரபு வழி விவசாய முறைகளை பலர் பின்பற்றி வருகின்றனர்.அதனால், தேவஸ்தானமும் ஏழுமலையானுக்கு மட்டுமல்லாமல், அன்னதானம் உண்ணும் அனைவருக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு, உணவு தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.விவசாயிகள் தேவஸ்தானத்திற்கு தேவைப்படும் அளவிற்கு, பொருட்களை தயார் செய்து அளித்தால், அவற்றை நேரடி கொள்முதல் செய்ய, தேவஸ்தானம் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தேவஸ்தான அறக்கட்டளைக்கு, 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய அவர், துப்புரவு பணியாளர்களுக்கு துண்டு, சானிடைசர், தேங்காய் எண்ணெய், சீப்பு, சோப்பு, முககவசம் உள்ளிட்டவை அடங்கிய, 'கிட்'டை இலவசமாக வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X