பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 01, 2021
Share
Advertisement
மே, 2, 2009கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 1934 ஆக., 5ம் தேதி பிறந்தவர், கே.பாலாஜி. சென்னை நரசுஸ் ஸ்டுடியோவில், புரொடக் ஷன் மேனேஜராக பணிபுரிந்தார். அவ்வையார் படம் மூலம் நடிகரானார். மனமுள்ள மறுதாரம் முதலான சில படங்களில் நாயகனாகவும் நடித்தார். தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில், துணை நடிகராக நடித்து பிரபலமானார். கடந்த, 1966-ல், 'சுஜாதா

இதே நாளில் அன்று


மே, 2, 2009



கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 1934 ஆக., 5ம் தேதி பிறந்தவர், கே.பாலாஜி. சென்னை நரசுஸ் ஸ்டுடியோவில், புரொடக் ஷன் மேனேஜராக பணிபுரிந்தார். அவ்வையார் படம் மூலம் நடிகரானார். மனமுள்ள மறுதாரம் முதலான சில படங்களில் நாயகனாகவும் நடித்தார். தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில், துணை நடிகராக நடித்து பிரபலமானார். கடந்த, 1966-ல், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்' என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். 'ரீமேக்' படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். பில்லா, தீ, வாழ்வே மாயம், கிரீடம் உட்பட, 54 படங்களை தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில், சிவாஜி கணேசன், 17 படங்களில் நடித்துள்ளார். இவரது தயாரிப்பில் வெளிவந்தவற்றில், 90
சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன. உடல் நலக்குறைவால், 2009 மே, 2ம் தேதி, தன், 75வது வயதில் உயிரிழந்தார்.தயாரிப்பாளர், கே.பாலாஜி காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X