கண் விழித்து கடமையாற்றுங்கள் அரசுக்கு சோனியா அறிவுறுத்தல்

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:“கொரோனாவால் மோசமான சூழல் நிலவி வருகிறது. மத்திய - மாநில அரசுகள், கண் விழித்து, கடமையை ஆற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என, காங்., தலைவர் சோனியா கூறியுள்ளார். காங்., தலைவர் சோனியா, நேற்று ஒரு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது:கொரோனா வைரசால் நிலவும் சூழல், மிகவும் மோசமாகி உள்ளது. கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
 கண் விழித்து கடமையாற்றுங்கள் அரசுக்கு சோனியா அறிவுறுத்தல்

புதுடில்லி:“கொரோனாவால் மோசமான சூழல் நிலவி வருகிறது. மத்திய - மாநில அரசுகள், கண் விழித்து, கடமையை ஆற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என, காங்., தலைவர் சோனியா கூறியுள்ளார்.

காங்., தலைவர் சோனியா, நேற்று ஒரு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது:கொரோனா வைரசால் நிலவும் சூழல், மிகவும் மோசமாகி உள்ளது. கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், நாடு தழுவிய ஒரு யுக்தியை, மத்திய அரசு வகுக்க வேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய நேரம் இது.

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தைப் போக்க வேண்டும். இந்த நெருக்கடி நிலை சீராகும் வரை, அவர்களின் வங்கி கணக்குகளில், குறைந்தபட்சம், 6,000 ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும்.கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில், ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும்.

இதை செய்தால் மட்டுமே, மக்களை நாம் காப்பாற்ற முடியும். உயிர்காக்கும் மருந்துகள், கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில், மத்திய அரசுக்கு காங்., கட்சி ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X