சில வரி செய்திகள்...: இந்தியா| Dinamalar

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : மே 01, 2021
Share
பிரதமர் மோடி அஞ்சலிபுதுடில்லி: டில்லியின் சிஸ்கஞ்ச் குருத்வாராவுக்கு நேற்று சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான, குரு தேக் பகதுாரின், 400வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சி.பி.ஐ., வழக்கு கோரி மனுபுதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும், 'ரெம்டெசிவிர்' உட்பட பல்வேறு மருந்துகள், பொதுமக்களுக்கு கிடைக்காத நிலையில்,

பிரதமர் மோடி அஞ்சலி

புதுடில்லி: டில்லியின் சிஸ்கஞ்ச் குருத்வாராவுக்கு நேற்று சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான, குரு தேக் பகதுாரின், 400வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சி.பி.ஐ., வழக்கு கோரி மனு

புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும், 'ரெம்டெசிவிர்' உட்பட பல்வேறு மருந்துகள், பொதுமக்களுக்கு கிடைக்காத நிலையில், அவற்றை அதிகம் கொள்முதல் செய்து இருப்பு வைக்கும் அரசியல் கட்சியினர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ரூ.8,873 கோடி நிதி

புதுடில்லி: மத்திய அரசின் சார்பில், ஜூன் மாதம் வழங்கப்படும் மாநில பேரிடர் சீரமைப்பு நிதி, கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் முன்னதாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மத்திய அரசு ஒதுக்கியுள்ள, 8,873 கோடி ரூபாயில், 50 சதவீதத்தை கொரோனா தொடர்பான ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்ட மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் பலி

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், 'அதாலத் டிவி' நிகழ்ச்சி வாயிலாக புகழ் பெற்ற, பாலிவுட் திரைப்பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால், 52, கொரோனா தொடர்பான பாதிப்பு களால், மும்பை மருத்துவமனையில் நேற்று காலமானார். பீஹாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த, பா.ஜ., மேல்சபை உறுப்பினர் ஹரி நாராயண் சவுத்ரி, 77. கொரோனா பாதிப்பால் பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார்.

பிரபல சிதார் இசைக்கலைஞரான பண்டிட் தேபு சவுத்ரி, 85, கொரோனா பாதிப்புகளால், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் காலமானார். பீஹாரில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்னாள் எம்.பி., முகமது சஹாபுதீன், 53, ஆயுள் தண்டனை கைதியாக, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று பலியானார்.

உணவளிக்கும் மனிதர்

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜாம்ஷெட் சிங் கபூர், 41. ஜோதிடரான இவர், சில ஆண்டுகளாக நாக்பூர் வீதிகளில் தினமும் பைக்கில் சென்று, தேவை படுவோருக்கு இலவச உணவு வழங்குகிறார். கொரோனா பாதிப்பிலும், நுாற்றுக்கணக்கானோரை தேடிச் சென்று உணவளிக்கும், இவரது சேவை தொடர்கிறது.

அசம் கானுக்கு கொரோனா

சீதாபூர்: உ.பி.,யில், ராம்பூர் எம்.பி., யும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான அசாம் கான், நில மோசடி வழக்கில், சீதாபூர் சிறையில் உள்ளார். இவர் உட்பட, கைதிகள், 14 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X