பொது செய்தி

இந்தியா

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை 85 வயது டாக்டரின் சேவை

Added : மே 01, 2021
Share
Advertisement
ராஞ்சி:ஜார்க்கண்டில், ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வரும், 85 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, 85. இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக, நோயாளிகளிடம் இருந்து வெறும், 5 ரூபாய் மட்டுமே பெற்று சிகிச்சை அளித்து வந்தார். பிரச்னைஇந்த சேவையை பாராட்டி, மத்திய
 ஏழைகளுக்கு இலவச சிகிச்சை 85 வயது டாக்டரின் சேவை

ராஞ்சி:ஜார்க்கண்டில், ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வரும், 85 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, 85. இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக, நோயாளிகளிடம் இருந்து வெறும், 5 ரூபாய் மட்டுமே பெற்று சிகிச்சை அளித்து வந்தார்.


பிரச்னை

இந்த சேவையை பாராட்டி, மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும், இவர், தன் பணியை நிறுத்தவில்லை. தன் உடல்நல பிரச்னைகளை பொருட்படுத்தாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது, மருந்து விலை உயர்வு போன்ற பிரச்னைகளால், கட்டணத்தை, 50 ரூபாயாக உயர்த்தி உள்ளார். எனினும், ஏழை நோயாளிகளுக்கு, இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி கூறியதாவது:தற்போது, மருத்துவ சேவைகள் வணிகமாக மாறிவிட்டது வருத்தமளிக்கிறது. டாக்டர்கள் சமூகத்தினருக்கு, ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.தினமும், ஒரு ஏழை நோயாளிக்கு மட்டும் இலவசமாக சிகிச்சை அளியுங்கள். எனக்கு இதய பிரச்னை உள்ளது.அதற்கு, 200 ரூபாய்க்கு மாத்திரை மருந்துகளை தினமும் எடுத்துக் கொள்கிறேன். இந்த கொரோனா காலத்தில், 'கிளினிக்'கை கிருமி நாசினியால் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


கட்டணம்

இவற்றை கருத்தில் வைத்து, சிகிச்சை கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. எனினும், அதை கொடுக்க முடியும் நபர்களிடம் இருந்து மட்டுமே, அந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X