கொரோனா தடுப்பு பணிகள் ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:'மக்கள் கூடும் பகுதிகளில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம், மார்ச் மாதமே அறிவுறுத்திவிட்டோம்' என, டில்லி உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.குற்றச்சாட்டுகொரோனா வைரஸ் பரவல், மீண்டும் வேகமெடுக்கத் துவங்கி உள்ளது. இதற்கிடையே, ஐந்து
 கொரோனா தடுப்பு பணிகள் ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

புதுடில்லி:'மக்கள் கூடும் பகுதிகளில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம், மார்ச் மாதமே அறிவுறுத்திவிட்டோம்' என, டில்லி உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவல், மீண்டும் வேகமெடுக்கத் துவங்கி உள்ளது. இதற்கிடையே, ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடந்தன.தேர்தல் பிரசாரங்களின்போது, அதிக அளவில் மக்கள் கூடியதன் காரணமாகவே, அந்தந்த மாநிலங்களில், வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கி உள்ளதாக, பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

முக கவசம் அணியாமல் பிரசாரம் செய்வது, அதிக கூட்டம் சேர்ப்பது போன்ற விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு தடை விதிக்கக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு தொடர்பாக பதில் அளித்து, மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வகுக்கப்பட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றக்கோரி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கான வழி காட்டுதல்கள், அவ்வப்போது வெளிடப்பட்டு வருகின்றன.அனுமதிமார்ச், 23ம் தேதி, ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், கூட்டம் சேரும் பகுதிகளில், வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவைப்பட்டால் கட்டுப்பாடு களை விதிக்கவும், மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X