இளைஞர்களுக்கு தடுப்பூசி மாநிலங்கள் கைவிரிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:'நாடு முழுதும், 18 - 44 வயதுள்ளோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய கையிருப்பு இல்லாததால், பெரும்பாலான மாநிலங்களில், முதல் நாளான நேற்று, தடுப்பூசி செலுத்தவில்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது. 'மூன்றாம் கட்டத்தில், 18 - 44 வயதுள்ளோருக்கு, மே, 1 முதல் தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும்' என, மத்திய அரசு
 இளைஞர்களுக்கு தடுப்பூசி மாநிலங்கள் கைவிரிப்பு

புதுடில்லி:'நாடு முழுதும், 18 - 44 வயதுள்ளோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய கையிருப்பு இல்லாததால், பெரும்பாலான மாநிலங்களில், முதல் நாளான நேற்று, தடுப்பூசி செலுத்தவில்லை.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது. 'மூன்றாம் கட்டத்தில், 18 - 44 வயதுள்ளோருக்கு, மே, 1 முதல் தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது.


சில மாவட்டம்

ஆனால், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான மாநிலங்களில் இந்தப் பணி, நேற்று துவங்கவில்லை. சில மாநிலங்களில், சில மாவட்டங்களில் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டது.கேரளா, பஞ்சாப், குஜராத், உத்தரகண்ட், ஆந்திரா, டில்லி, ஆகியவை, 'பற்றாக்குறை உள்ளதால், தடுப்பூசி வழங்கும் பணி நடக்கவில்லை' என, அறிவித்துள்ளன.

உத்தர பிரதேசத்தில், 75 மாவட்டங்களில், ஏழு மாவட்டங்களில் மட்டுமே தடுப்பூசி வழங்கும் பணி நடந்தது. ராஜஸ்தானில், மூன்று மாவட்டங்களிலும், குஜராத்தில், 10ல் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டது.தற்போது நடக்காதுதமிழகம், அசாம், தெலுங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர் மாநிலங்களும், 18 - 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி, தற்போது நடக்காது என, ஏற்கனவே அறிவித்து விட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X