நில அபகரிப்பு புகார் அமைச்சர் பதவி பறிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
ஐதராபாத்:தெலுங்கானாவில், நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான, மாநில சுகாதார துறை அமைச்சர் எட்டாலா ராஜேந்தரின் பதவி, பறிக்கப்பட்டது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில சுகாதார துறை அமைச்சராக இருந்த எட்டாலா ராஜேந்தர் மீது, நில அபகரிப்பு புகார் எழுந்தது. இந்நிலையில், ராஜேந்தரின் அமைச்சர் பதவி,
 நில அபகரிப்பு புகார் அமைச்சர் பதவி பறிப்பு

ஐதராபாத்:தெலுங்கானாவில், நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான, மாநில சுகாதார துறை அமைச்சர் எட்டாலா ராஜேந்தரின் பதவி, பறிக்கப்பட்டது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில சுகாதார துறை அமைச்சராக இருந்த எட்டாலா ராஜேந்தர் மீது, நில அபகரிப்பு புகார் எழுந்தது. இந்நிலையில், ராஜேந்தரின் அமைச்சர் பதவி, பறிக்கப்பட்டது.

அரசின் வேண்டுகோளை ஏற்று, கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சுகாதார துறை இலாகாவை, முதல்வர் சந்திரசேகர ராவ், கூடுதலாக கவனித்துக் கொள்வார். மேடக் மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த நில அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த, தலைமை செயலருக்கு, முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். இந்த விசாரணையை மாவட்ட கலெக்டர் மேற்கொள்ள வேண்டும் என்றும், விசாரணை முடிந்ததும், அதன் விரிவான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே ராஜேந்தர் கூறுகையில், “என் மீது அவதுாறு பரப்ப, இந்த சதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X