பொது செய்தி

இந்தியா

வருமான வரி கணக்கு அவகாசம் நீட்டிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2019 - 20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, இந்தாண்டு மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், இந்தக் கெடு, மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரி துறையின், 'நோட்டீஸ்' பெற்றவர்கள், வருமான வரி

புதுடில்லி:வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2019 - 20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, இந்தாண்டு மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

எனினும், இந்தக் கெடு, மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வருமான வரி துறையின், 'நோட்டீஸ்' பெற்றவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்., 1ம் தேதியுடன் முடிவடைந்தது. இதுவும், தற்போது, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை தள்ளி வைக்கும்படி, வருமான வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் உள்ளிட்டோர், வருமான வரி துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X