பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவின் கொண்டாட்டமும்...

Added : மே 01, 2021
Share
Advertisement
கொதிக்கும் வெயிலில், இடுப்பில் கச்சையும், காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு, மனைவி அடிக்கும் மத்தள இசைக்கு ஏற்ப, 'ஜிங்கு ஜிங்கு' என்று நடனம் ஆடுகிறார் அந்த கழைக்கூத்தாடி.இடையிடையே தன் கையில் உள்ள சாட்டையால், தன்னைத்தானே உடலில் 'சட்டீர்...சட்டீர்' என அடித்துக்கொள்கிறார். முதுகெல்லாம் ரத்த கோடுகள். வியர்வையோடு சேர்ந்து ரத்தமும் கசிகிறது. ஐந்து நிமிட ஆட்டத்துக்கு

கொதிக்கும் வெயிலில், இடுப்பில் கச்சையும், காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு, மனைவி அடிக்கும் மத்தள இசைக்கு ஏற்ப, 'ஜிங்கு ஜிங்கு' என்று நடனம் ஆடுகிறார் அந்த கழைக்கூத்தாடி.இடையிடையே தன் கையில் உள்ள சாட்டையால், தன்னைத்தானே உடலில் 'சட்டீர்...சட்டீர்' என அடித்துக்கொள்கிறார்.

முதுகெல்லாம் ரத்த கோடுகள். வியர்வையோடு சேர்ந்து ரத்தமும் கசிகிறது. ஐந்து நிமிட ஆட்டத்துக்கு பிறகு, தன் குழந்தையை துாக்கி தோளில் வைத்துக்கொண்டு, வேடிக்கை பார்த்தவர்களிடம் கையேந்துகிறார்.சிலர் சில்லரை காசுகளை கொடுக்கின்றனர். சிலர், 'சேன்ச் இல்லை' என்று சிம்பிளாக சொல்கின்றனர்.கிடைத்ததை பெற்றுக் கொண்டு, குழந்தை, மனைவியுடன் நகர்ந்தார் அந்த கூத்துக்கலைஞர். அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தோம்... ''எம்பேரு கோபி, சொந்த ஊரு மதுரை பக்கம் தேனிங்க. இங்க வந்து ரெண்டு வருஷமாச்சு. கொரோனா வந்ததுல இருந்து, ஊரு பக்கம்போகல. இங்கதான் காந்தி பார்க் பக்கத்து ரோட்டோரம் தங்கி இருக்கோம்.

எனக்கு வேற வேல எதுவும் தெரியாது. அப்பங்காலத்துல இருந்து, கூத்தாடித்தான் பொழைக்கிறோம்.''''கலெக் ஷன் பெரிசா இல்லையே...இதை வச்சு எப்படி குடும்பத்தை சமாளிக்கிறீங்க?''''நெசந்தான். ஜனங்ககிட்ட கையேந்துனா, ஒரு ரூபா, ரெண்டு ரூபா குடுப்பாங்க. கடை வீதி பக்கம் போனா ஒரு நாள் வயித்து பாட்டுக்கு காசு கிடைக்கும். இப்ப கொரோனா வந்ததுல இருந்து, ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட, காசு கிடைக்கிறதில்ல. ஊரடங்கு போட்டுட்டா குடும்பத்தோட பட்டினிதான் கிடக்கணும்,'' என, பேசியபடி அடுத்த வீதியை நோக்கி, நடையை கட்டுகிறார் அந்த கூத்துக்கலைஞர்.இந்த கொரோனா, கோடீஸ்வரர்களை மட்டுமல்ல, கடைக்கோடி மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை.என்னத்தை சொல்ல!கூத்தாடி கலைஞரின் ஆட்டத்தையும், சாட்டையடியையும் ஓசியில் வேடிக்கை பார்த்த பலரும், முகத்தில் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கூத்தாடியவர் தனக்கும், தன் குழந்தைக்கும் மாஸ்க் அணிய மறக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X