பொது செய்தி

தமிழ்நாடு

'பிழிஞ்செடுக்குது' குடும்ப செலவு

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ். குறுந்தொழில் முனைவோரான இவர், ஜாப் ஆர்டர்கள் எடுத்து செய்யும், ரீவைண்டிங் ஒர்க் ஷாப்பை நடத்தி வருகிறார். தொடர்ந்து வீசிய கொரோனா அலையால், ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பை சமாளிக்க, தனது ஒர்க் ஷாப்பில் இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.''கடந்த சில ஆண்டுகளாக, மூலப்பொருட்களின்

கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ். குறுந்தொழில் முனைவோரான இவர், ஜாப் ஆர்டர்கள் எடுத்து செய்யும், ரீவைண்டிங் ஒர்க் ஷாப்பை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து வீசிய கொரோனா அலையால், ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பை சமாளிக்க, தனது ஒர்க் ஷாப்பில் இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.''கடந்த சில ஆண்டுகளாக, மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு மற்றும் ஜிஎஸ்டி போன்ற காரணங்களால், தொடர்ந்துதொழில் செய்யமுடியாத நிலை இருந்தது. கொரோனா ஊரடங்கும் சேர்ந்து கொண்டதால், ஜாப் ஆர்டர்களை நம்பி தொழில் செய்யும், என் போன்றவர்களின் வாழ்க்கை திசை மாறி விட்டது.'' ''எனது நிறுவனத்தில் ஒரு ஊழியரை பணிக்கு வைத்துள்ளேன்.

அவருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். குடும்ப செலவுகளை சமாளிக்க, ஒர்க் ஷாப் முன் இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வருகிறேன்.ஏதோ, குடும்ப செலவுக்கு தேவையான அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. முழு ஊரடங்கு போட்டு விட்டால், இந்த பொழப்பும் போய் விடும் என்று பயமாக இருக்கிறது,'' என பரிதாபமாக கூறுகிறார் கனகராஜ்.முழு ஊரடங்கு வந்து விட்டால், கனகராஜ் நிலைமைதான் அனைவருக்கும் என்பதை உணர்ந்து, அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவோம். குறிப்பாக, தடுப்பூசியை இன்றே போட்டுக்கொள்வோம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X