பொது செய்தி

தமிழ்நாடு

திருமுருகன் காய்கறி மார்க்கெட் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!

Added : மே 01, 2021
Share
Advertisement
''சொந்த வீடு இருப்பவர்கள், வியாபார நோக்கத்தில் மாடித்தோட்டம் அமைத்தால், மாதம் தோறும் நல்ல வருமானம் பார்க்கலாம்,'' என்கிறார், மாடித்தோட்டம் அமைத்து இருக்கும் திருமுருகன். கோவையில் பல பேர், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து நல்ல மகசூல் ஈட்டி வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில், மானியம் வழங்கப்படுகிறது.உரம்,

''சொந்த வீடு இருப்பவர்கள், வியாபார நோக்கத்தில் மாடித்தோட்டம் அமைத்தால், மாதம் தோறும் நல்ல வருமானம் பார்க்கலாம்,'' என்கிறார், மாடித்தோட்டம் அமைத்து இருக்கும் திருமுருகன்.

கோவையில் பல பேர், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து நல்ல மகசூல் ஈட்டி வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில், மானியம் வழங்கப்படுகிறது.உரம், விதை மற்றும் இடு பொருட்கள் மானிய விலையில் கிடைக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் யூனியன் பேங்க் முதல் வீதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் தனது வீட்டு மொட்டைமாடியில், செழிப்பான முறையில் மாடித்தோட்டம் அமைத்துள்ளார். கிடைக்கும் காய்கறிகளை, தன் வீட்டு தேவைக்கு போக, மீதம் உள்ளதை நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.அவரிடம் பேசினோம்...''என் உறவினர்கள் மூன்று பேர், மாடி தோட்டம் வைத்து சிறப்பாக வளர்த்து வருகின்றனர்.

அதை பார்த்த பிறகு எனக்கும், ஆர்வம் வந்தது. அவர்கள் தந்த ஆலோசனையின் படி, முதலில், 50 செடிகள் வைத்தேன். நன்றாக வளர்ந்து மகசூல் கிடைத்தது.வேளாண் பல்கலைக்கு சென்று விதைகள் வாங்கி வந்து, பதியம் போட்டேன். இப்போது, தக்காளி, வெண்டை, கத்தரி, சுரை, பீர்க்கன், முள்ளங்கி, பீட்ரூட், காலிபிளவர் மற்றும் கீரை வகைகள் என, 150 செடிகளுக்கு மேல் உள்ளன,''.''பராமரிப்பு, பாதுகாப்பு பற்றி கூறுங்களேன்...?''''வெயிலுக்கு பாதுகாப்பாக, பசுமை கூடாரம் அமைத்து இருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொட்டியில் உள்ள பழைய மண்ணை எடுத்து விட்டு, புதிய மண் போட்டு அதில், செம்மண்ணுடன் மண்புழு உரம், கோகோபைட், வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிரி உரம்(பயோ பெர்ட்டிலைசர்) ஆகியவற்றை கலந்து, புதிய செடிகளை நடுவேன்,''''எவ்வளவு காய்கறி கிடைக்கும்?''''ஒரு முறைக்கு, தக்காளி ஆறு முதல் எட்டு கிலோ வரை கிடைக்கும். வெண்டைக்காய், சுரைக்காயில் இருந்தும் நல்ல மகசூல் கிடைக்கும். சொந்த வீடு இருப்பவர்கள் வியாபார நோக்கத்தில் மாடித்தோட்டம் அமைத்தால், மாதம் தோறும் நல்ல வருமானம் பார்க்கலாம். ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்து, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விற்பனை செய்தால், கணிசமான வருமானம் கிடைக்கும்,''திருமுருகனை பின்பற்றி, நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே!

''ஒரு முறைக்கு, தக்காளி ஆறு முதல் எட்டு கிலோ வரை கிடைக்கும். வெண்டைக்காய், சுரைக்காயில் இருந்தும் நல்ல மகசூல் கிடைக்கும். சொந்த வீடு இருப்பவர்கள் வியாபார நோக்கத்தில் மாடித்தோட்டம் அமைத்தால், மாதம் தோறும் நல்ல வருமானம் பார்க்கலாம்,''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X