பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று தவிர்க்க ...

Added : மே 01, 2021
Share
Advertisement
நகை கடைகளுக்கு மக்கள் நேரிடையாக செல்வதை தவிர்க்க, தங்க நாணயங்களை தரும் ஏடிஎம் இயந்திரம், கோவையில் நிறுவப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த புல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தங்க நகைகள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், தங்க நாணயங்களை விநியோகிக்கும், ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. 'கோல்டு ஆன் தி கோ' என்ற பெயரில் கிராஸ்கட் ரோடு, சிங்கப்பூர் பிளாசாவில் அமைந்துள்ள மென்ஸ்

நகை கடைகளுக்கு மக்கள் நேரிடையாக செல்வதை தவிர்க்க, தங்க நாணயங்களை தரும் ஏடிஎம் இயந்திரம், கோவையில் நிறுவப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த புல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தங்க நகைகள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், தங்க நாணயங்களை விநியோகிக்கும், ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

'கோல்டு ஆன் தி கோ' என்ற பெயரில் கிராஸ்கட் ரோடு, சிங்கப்பூர் பிளாசாவில் அமைந்துள்ள மென்ஸ் அவென்யூவில், இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.இதில், ரொக்க பணமாகவோ, ஆன்லைன் முறையிலோபணம் செலுத்திதங்க நாணயங்களை,வாங்க முடியும்.இது குறித்து,புல்மூன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சீனிவாசன் கூறியதாவது: கொரோனா சூழ்நிலையில், நகை கடைகளுக்கு மக்கள் நேரில் வருவதை தவிர்க்கும் விதமாக, புதிய விற்பனைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஏடிஎம் இயந்திரத்தில், இரண்டு நிமிடத்தில் தங்க நாணயங்களை வாங்க முடியும்.ஒன்று, இரண்டு, நான்கு, எட்டு கிராம் என தேவைக்கேற்ப நாணயங்களை வாங்கலாம்.

அன்றைய சந்தை விலையில், 22 கேரட் மற்றும்பி.ஐ.எஸ்., 916 ஹால்மார்க் தரத்தில், உத்திரவாத சான்றிதழுடன், தங்க நாணயம் கிடைக்கிறது.ரொக்கமாக 2 லட்சம் ரூபாய் வரையில் செலுத்த முடியும். யு.பி.ஐ., கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம், ஆன்லைன் முறையிலும் பணம் செலுத்தலாம்.தங்க நாணயங்களிலுள்ள, கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால், புல்மூன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் முகவரி,மொபைல் எண், ஜி.எஸ்.டி., எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.கோவையில் மேலும் 15 இடங்களிலும்,தமிழ்நாடு முழுவதும் தங்க நாணய ஏடிஎம் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X