பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசனம் அமைக்க இணையத்தில் பதிவு செய்யுங்க!

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம் . தோட்டக்கலைத்துறையின் நுண்ணீர் பாசன திட்டத்தில், சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலும், மற்ற

கோவை : அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம் .

தோட்டக்கலைத்துறையின் நுண்ணீர் பாசன திட்டத்தில், சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலும், மற்ற விவசாயிகள் 5 ஹெக்டேர் வரையிலும் பயன் பெறலாம். இதே போல, நுண்ணீர் பாசனம் அமைக்க குழி எடுப்பதற்கு, ஹெக்டேருக்கு 3000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில், பாசன நீர் குழாய்கள் நிறுவ, ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய், ஆயில் இன்ஜின்/மின் மோட்டார் அமைக்க 15 ஆயிரம் ரூபாய், தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களை, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். http://tnhorticulture.tn.gov.in/horti/newmim/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X