பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சு பணியாளர் காலியிட விபரம் திரட்டல்

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சு பணியாளர் காலியிட விபரங்களை, சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க, பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் உருவாகும் காலியிட விபரங்களை திரட்டி, அவற்றை அரசுக்கு தெரிவிப்பது வழக்கம். டி.என்.பி.எஸ்.இ., போட்டித் தேர்வு மூலமாக, இக்காலியிடங்கள்

கோவை : பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சு பணியாளர் காலியிட விபரங்களை, சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க, பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் உருவாகும் காலியிட விபரங்களை திரட்டி, அவற்றை அரசுக்கு தெரிவிப்பது வழக்கம். டி.என்.பி.எஸ்.இ., போட்டித் தேர்வு மூலமாக, இக்காலியிடங்கள் நிரப்பப்படும்.இதன்படி, தற்போது வரை உள்ள காலியிடங்க ளோடு, அடுத்த கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோரால் ஏற்படும் காலியிடங்களும் குறிப்பிட்டு, அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில், பதவியை குறிப்பிட்டு காலியிடங்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவற்றை தொகுத்து, விரைவில் இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X