பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் இன்று, 'க்ளைமேக்ஸ்'! எட்டு தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை... கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் ஏற்பாடு ரெடி

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் அமைந்துள்ள ஓட்டு எண்ணிக்கை மையம், இரவு பகலாக தயாராகி வருகிறது.ஒவ்வொரு தொகுதிக்கும், 14 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தபால் ஓட்டுகள், தனி அறையில், இரண்டு டேபிள்களில் எண்ணப்பட உள்ளன. எட்டு தொகுதிக்கு, 450 பேர் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.ஓட்டு எண்ணும் அலுவலர், ஏஜன்ட்கள் அனைவரும், காலை, 7:00 மணிக்கு, கல்லுாரி
 சட்டசபை தேர்தலில் இன்று, 'க்ளைமேக்ஸ்'!  எட்டு தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை...  கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் ஏற்பாடு ரெடி

திருப்பூர் : திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் அமைந்துள்ள ஓட்டு எண்ணிக்கை மையம், இரவு பகலாக தயாராகி வருகிறது.ஒவ்வொரு தொகுதிக்கும், 14 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

தபால் ஓட்டுகள், தனி அறையில், இரண்டு டேபிள்களில் எண்ணப்பட உள்ளன. எட்டு தொகுதிக்கு, 450 பேர் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.ஓட்டு எண்ணும் அலுவலர், ஏஜன்ட்கள் அனைவரும், காலை, 7:00 மணிக்கு, கல்லுாரி வளாகத்தில் ஆஜராகிவிட வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் எதிரே உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டப வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, ஓட்டு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும். சரியாக, 7:45 மணிக்கு, அந்தந்த டேபிள்களில் ஆஜராகிவிட வேண்டும். காலை, 8:00 மணிக்கு, தபால் ஓட்டு பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும். அடுத்த சில நிமிடங்களில், வேட்பாளர் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூம்'கள் திறக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்படும்.

'ஸ்ட்ராங் ரூம்'களில் இருந்து, முதல் ஓட்டுச்சாவடியில் இருந்து, தலா, 14 பெட்டிகள் வீதம், ஒவ்வொரு சுற்றுக்கும் எடுத்துவந்து எண்ணப்படும். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதால், அதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தன. வளாகத்திற்கு வெளியே, அலுவலர், ஏஜன்டுகள் செல்ல, மரக்கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. வளாகத்திற்குள், அந்தந்த தொகுதிகளின் எண்ணிக்கை மையம் செல்ல, தனித்தனியாக, வழித்தட வசதி ஏற்படுத்தி, வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.போலீஸ் பரிசோதனைக்காக, சிறப்பு 'ெஷட்' வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ். பரிசோதனை முடிவுகளை கூறும் சான்றிதழ் மற்றும் முக கவசம், 'பேஷ் ஷீல்டு' அணிந்தவர்கள் மட்டுமே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவில், வேட்பாளராக களமிறங்கிய, 137 நபர்கள் பெற்ற ஓட்டு விவரங்கள், 3,343 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எண்ணி முடிக்கும் போது தெரியவரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X