சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஸ்க் அணியாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம்

Added : மே 01, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நாள்தோறும், 8 முதல் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர், போலீசார், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.இருப்பினும், பொது இடங்களில் முக கவசம்

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நாள்தோறும், 8 முதல் 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர், போலீசார், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.இருப்பினும், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் ஏராளமானோர் சுற்றி வருகின்றனர். இது குறித்து, நேற்று முன்தினம் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.நேற்று பி.டி.ஓ.,க்கள் அசோகன், சுந்தரி, எஸ்.ஐ., செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், மத்துவராயபுரம் ஊராட்சி தலைவர் கிட்டுசாமி என, அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து, இருட்டுப்பள்ளம் பகுதியில், முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு, அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X