பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை வீழ்த்த, ஒரே ஆயுதம் தடுப்பூசி!

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனா என்கிற கொடிய வைரஸ், கடந்த 2020 ல், உலகளாவிய நாடுகளில் பரவி, கோரத்தாண்டவம் ஆடியது. எவ்வித மருந்தும் இல்லாததால், முக கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தல்; ஊரடங்கு மட்டுமே, தொற்று தடுப்புக்கு கேடயங்களாக பயன்படுத்தப்பட்டன.நம் நாட்டில் தற்போது இரண்டாவது அலை வீசிவருகிறது. இப்போது நம்மிடம், கொரோனாவுக்கு எதிராக போராட, கோவேக்ஸின், கோவிட் ஷீல்டு என்கிற இரண்டு

திருப்பூர் : கொரோனா என்கிற கொடிய வைரஸ், கடந்த 2020 ல், உலகளாவிய நாடுகளில் பரவி, கோரத்தாண்டவம் ஆடியது.

எவ்வித மருந்தும் இல்லாததால், முக கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தல்; ஊரடங்கு மட்டுமே, தொற்று தடுப்புக்கு கேடயங்களாக பயன்படுத்தப்பட்டன.நம் நாட்டில் தற்போது இரண்டாவது அலை வீசிவருகிறது. இப்போது நம்மிடம், கொரோனாவுக்கு எதிராக போராட, கோவேக்ஸின், கோவிட் ஷீல்டு என்கிற இரண்டு தடுப்பூசிகளும், வலிமையான ஆயுதங்களாக உள்ளன.கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போராட்டத்தில், நமது தேசத்தை வெற்றி பெறச்செய்யவேண்டியது, நாம் ஒவ்வொருவரின் கடமை; எனவே, அனைவரும் தவறாமல், தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல்:உலகளாவிய நாடுகளில், கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாக தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி குறித்து வீணாக பயப்பட தேவையில்லை; தடுப்பூசி போடாமல் அலட்சியமாக செயல்பட்டால்தான், சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிற யதார்த்தத்தை புரிந்துகொள்ளவேண்டும்.நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளேன். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் அனைவருக்கும், ஊசி போட்டுள்ளோம். தொழில் வளர்ச்சி, நிறுவன வளர்ச்சிக்கு தொழிலாளரே முதுகெலும்பாக உள்ளனர்.அரசு மருத்துவமனை மூலம் இலவசமாகவோ, நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவில், தொழிலாளர்களை தடுப்பூசி போடச் செய்யவேண்டும். நாடுமுழுவதும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஏ.இ.பி.சி.,ல் உறுப்பினராக உள்ளனர்.

உறுப்பினர் அனைவருக்கும், இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளேன்.தென்னிந்திய பனியன் உற்பத்தி யாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:கொரோனாவை ஒழிப்பதற்கு, இரண்டு தடுப்பூசிகள் நம்வசம் உள்ளன. யாரும் எவ்வித பயமோ, தயக்கமோ கொள்ளத்தேவையில்லை. திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பல லட்சம் பேர் வசிக்கின்றனர். அனைத்து தொழிலாளரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். இதுகுறித்து, சைமா சங்க உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, கடிதமும் அனுப்பியுள்ளோம். முன்னுதாரணமாக, தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளேன்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:பெரிச்சிபாளையம் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டுள்ளேன். கொரோனா தடுப்பில் மக்கள் அலட்சியமாக செயல்பட கூடாது. பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தாவிட்டால், பேரிழப்புகளை சந்திக்க நேரிடும்; முதல் அலையிலேயே இதை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம்.அதற்காக பயப்பட தேவையில்லை. தடுப்பூசி என்கிற அற்புதமான சக்தி நம்மிடம் உள்ளது. அனைத்து தொழில்முனைவோர், தொழிலாளர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயங்குனர் சந்திரன்:கோவேக்ஸின், கோவிட் ஷீல்டு என்கிற இரண்டு தடுப்பூசிகளும் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவ்விரண்டும் இந்தியாவிலேயே தயாரானது என்பது, கூடுதல் சிறப்பு. கொரோனா ஒழிப்பில், அரசின் செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுதலுக்குரியது.நான் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளேன். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம் நடத்தி, அவர்களுக்கு தடுப்பூசி போடுகிறோம். இதுவரை, ஆயிரம் தொழிலளருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்ற தொழிலாளருக்கு விரைவில் ஊசி போடப்படும். அனைவரும் தடுப்பூசி போட்டு, தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X