பொது செய்தி

தமிழ்நாடு

இருதய நோயாளிகளுக்கு ... அலட்சியமாக இருந்தால் 'ரிஸ்க்'

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சூழலில், இருதய நோயாளிகள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், என டாக்டர்கள் கூறியுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில், தினசரி கொரோனா பாதிப்பு, இரு மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவரின் உடலில்,

கோவை : கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சூழலில், இருதய நோயாளிகள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில், தினசரி கொரோனா பாதிப்பு, இரு மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவரின் உடலில், நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில், இருதயத்தின் வேலை அதிகமாகும் போது, மாரடைப்பு மற்றும் இருதயம் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனையின், இருதயவியல் துறை துணை பேராசிரியர் நம்பிராஜன் கூறியதாவது:இருதயம் பாதிப்புள்ளவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமடைவது சற்று கடினம்.ஏனெனில், இந்த வைரஸ் நேரடியாக, இருதயத்தின் தசைகளுக்குள் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இரண்டாவது, கொரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, இருதயம் அதிகமாக வேலை செய்கிறது.அப்போது மாரடைப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. இருதயத்தில் உள்ள ரத்த குழாய்களில், ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்படுத்தி விடுகிறது.

இதுபோன்று, பல்வேறு வகைகளில் இருதயத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை இந்த வைரஸ்சுக்கு உண்டு.எனவே, இருதயம் பிரச்னை இருப்பவர்கள், கூட்டமாக உள்ள இடங்களுக்கு தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும்போது, இரு முக கவசங்கள் அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.இருதய பிரச்னை தொடர்பான மாத்திரைகளை, தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

ஒருவேளை, இருதயத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவனைக்கு சென்று இ.சி.ஜி.,எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை, மேற்கொள்வது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த வைரஸ் நேரடியாக, இருதயத்தின் தசைகளுக்குள் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இரண்டாவது, கொரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, இருதயம் அதிகமாக வேலை செய்கிறது. அப்போது எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X