சின்ன சின்ன பிரச்னை! தீர்வு காண்பதில் இழுபறி.. ஓட்டுப்பதிவு - ஓட்டு எண்ணிக்கை இடைவெளி ஏற்படுத்திய சிக்கல்| Dinamalar

தமிழ்நாடு

சின்ன சின்ன பிரச்னை! தீர்வு காண்பதில் இழுபறி.. ஓட்டுப்பதிவு - ஓட்டு எண்ணிக்கை இடைவெளி ஏற்படுத்திய சிக்கல்

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021
Share
திருப்பூர் : ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையேயான அதிக இடைவெளி, திருப்பூரில், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இழுபறியை ஏற்படுத்தியது. தமிழகம். கேரளா, புதுவை சட்டசபை தேர்தல்கள், கடந்த மாதம் 6ம் தேதி நிறைவடைந்தன. ஆனால், மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபை தேர்தல்கள் நிறைவடையாததால்தான், ஓட்டு மெஷின்கள், ஓட்டு எண்ணிக்கைக்காக, கிட்டத்தட்ட ஒரு மாதம்
 சின்ன சின்ன பிரச்னை! தீர்வு காண்பதில் இழுபறி.. ஓட்டுப்பதிவு - ஓட்டு எண்ணிக்கை இடைவெளி ஏற்படுத்திய சிக்கல்

திருப்பூர் : ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையேயான அதிக இடைவெளி, திருப்பூரில், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இழுபறியை ஏற்படுத்தியது.

தமிழகம். கேரளா, புதுவை சட்டசபை தேர்தல்கள், கடந்த மாதம் 6ம் தேதி நிறைவடைந்தன. ஆனால், மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபை தேர்தல்கள் நிறைவடையாததால்தான், ஓட்டு மெஷின்கள், ஓட்டு எண்ணிக்கைக்காக, கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை, அடைகாக்க வேண்டியதாயிற்று.பிரச்னை, ஓட்டு எண்ணிக்கைக்கான காத்திருப்பு மட்டுமல்ல,தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருப்பதால், மக்கள் பிரச்னைகளுக்கு, உடனுக்குடன் தீர்வு காண முடியவில்லை.திருப்பூரில் என்ன பிரச்னைதிருப்பூரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், பல சாலைகளில், வாகனங்கள் இயல்பாக செல்ல இயலாத நிலை நீடிக்கிறது. பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பணிகளால், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. கடந்த இரு மாதங்களாக, பிரச்னைகள் நீடிக்கும் இடங்களில், மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும், காலதாமதம் ஏற்பட்டது.மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தலையிட்டால், பிரச்னைகள் உடனடியாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். நிதி ஒதுக்கீடு போன்றவற்றிலும், சிக்கல்கள் ஏற்பட்டன.தொழில் நகராக திருப்பூர் இருப்பதால், சின்ன பிரச்னைகள் என்றாலும், உடனடியாக தீர்வு காணப்பட்டால்தான், அது தொழிலின் தடையற்ற ஓட்டத்துக்கு சிறப்பானதாக இருக்கும்.

மனுக்களை மக்கள் கொடுத்தால், அதிகாரிகள் தீர்வு காண்பதாக உறுதியளித்தாலும், 'ஓட்டு எண்ணிக்கை முடியட்டுமே' என்று காரணம் கூறி, பிரச்னைக்கு உடனடி தீர்வு காணாத நிலை இருந்தது.இவ்வளவு தாமதமா?'ஓட்டு சாவடிகளில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைத் தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது என்றாலும், இதுபோன்ற தொற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு நீடிக்கும் வகையில் தேர்தலை அது திட்டமிட்டதையும், பெரும் திரளான மக்கள் கூடிய தேர்தல் பிரசாரங்களை அது வேடிக்கை பார்த்ததையும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக, 'கொரோனா இரண்டாவது அலை சீற்றத்துக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகளே பெரிதும் பொறுப்பு' என்று சென்னை உயர் நீதிமன்றம் சாடியது.தேர்தல் அறிவிப்புக்கும், முடிவுகள் அறிவிப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதை, எதிர்காலத்தில் தேர்தல் ஆணையம் நிச்சயமாக பின்பற்றும் என்று நம்பலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X