பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா, தந்தம், சந்தனக்கட்டை...

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை, : வனக்குற்றங்களை கண்டறிந்து அவற்றை தடுக்க வளவன், கடுவன், அதவை, காளிகம் எனும் சிப்பிப்பாறை நாய்கள், விரைவில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. வனப்பகுதியில் மரங்கள் வெட்டிக்கடத்தல், வனவிலங்குகள் வேட்டை, கஞ்சா கடத்தல் ஆகிய குற்றச்சம்பங்களை கண்டறிய, நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்களில்,

கோவை, : வனக்குற்றங்களை கண்டறிந்து அவற்றை தடுக்க வளவன், கடுவன், அதவை, காளிகம் எனும் சிப்பிப்பாறை நாய்கள், விரைவில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

வனப்பகுதியில் மரங்கள் வெட்டிக்கடத்தல், வனவிலங்குகள் வேட்டை, கஞ்சா கடத்தல் ஆகிய குற்றச்சம்பங்களை கண்டறிய, நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்களில், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தகைய நாய்களுக்கான பராமரிப்பு செலவு அதிகம் என்பதால், நாட்டு நாய்களை இப்பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து கோவை, கூடலுார், ஊட்டி வனக்கோட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு தலா ஒன்று என, நான்கு சிப்பிப்பாறை நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டன. அவை தற்போது, தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் உள்ள, தமிழக வனவியல் பயற்சி கல்லுாரியில் பயிற்சி பெற்று வருகின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சிப்பிப்பாறை வகை நாய்கள் மோப்ப சக்தி மிகுந்தவை. நீண்ட துாரம் விரைந்து ஓடக்கூடியவை. இலக்கை துல்லியமாக கண்டறியக்கூடியவை. நாட்டு நாய்கள் என்பதால் நமது காலநிலைக்கு ஏற்றவை.

இதனால், இவற்றின் பராமரிப்பு செலவு குறைவு. கடந்த இரு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பயிற்சி அளித்து வருகிறார். தொலை துாரத்தில் உள்ள பொருட்களை கண்டறிதல், குழிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை கண்டறிதல், வனவிலங்குகளின் தோல், கஞ்சா ஆகியவற்றை கண்டறியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவையிலிருந்து தலா இரு, வேட்டை தடுப்பு காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கட்டளைக்கு கீழ் படியும் விதம், நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மே மாதத்துக்கு பின், நாய்கள் இங்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X