பொது செய்தி

தமிழ்நாடு

நாற்பது பிளஸ் ஆண்களே...ஜாக்கிரதையா இருங்க!

Added : மே 01, 2021
Share
Advertisement
''கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்போடுதான், அதிகம் பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால் அவர்கள் அட்மிட் ஆனவுடன், ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை தவிர்க்க, அறிகுறிகள் தென்பட்டவுடன் டாக்டரை அணுக வேண்டும்,'' என்கிறார் கே.ஜி.மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் மகேஸ்வரன். கொரோனா முதல் அலையை விட, இரண்டாவது அலை வீரியமடைய காரணம் என்ன?வீரியம்

''கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்போடுதான், அதிகம் பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால் அவர்கள் அட்மிட் ஆனவுடன், ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை தவிர்க்க, அறிகுறிகள் தென்பட்டவுடன் டாக்டரை அணுக வேண்டும்,'' என்கிறார் கே.ஜி.மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் மகேஸ்வரன்.

கொரோனா முதல் அலையை விட, இரண்டாவது அலை வீரியமடைய காரணம் என்ன?வீரியம் எல்லாம் ஒரே மாதிரிதான் உள்ளது. முதல் அலையின்போது, மக்கள் மத்தியில் அச்சம் இருந்தது. அதனால், ஓரளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருந்தனர். முறையாக 'டெஸ்ட்' எடுத்துக் கொண்டனர்.பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இன்றைக்கு அப்படி இல்லை. பயம் இல்லாமல் அலட்சியமாக உள்ளனர். தொற்று ஏற்பட்டு ஒருவாரம் ஆன பிறகுதான், மருத்துவமனைக்கு வருகின்றனர்.

அதற்குள் பலருக்கு பரவி விடுகிறது. இதுதான் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணம். கொரோனாவின் அறிகுறிகள் இந்த முறை, மாறி இருப்பதாக சொல்லப்படுகிறதே...?முதல் அலையின் போது, நுரையீரல் பாதிப்பு அதிகம் இல்லை. இப்போது கொரோனா நிமோனியா பாதிப்பு நிறைய உள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. சி.டி. ஸ்கேன் எடுத்த பிறகுதான் தெரிகிறது. அதற்குள் பலருக்கு பரவி விடுகிறது. அதனால்தான் இந்த முறை குடும்பத்துடன், அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்கள், சுகர், பீபி உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்தாண்டு ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்னையே இல்லை. இப்போது இதன் தேவை அதிகரிக்க காரணம் என்ன?முதல் தொற்றின் போது, நுரையீரல் பாதிப்பு அதிகம் இல்லை. இப்போது நுரையீரல் பாதிப்போடுதான், மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால் அவர்கள் அட்மிட் ஆனவுடன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. சுவாச பிரச்னை ஏற்படும் போது, உடனே ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, அறிகுறிகள் தென்பட்டவுடன், டாக்டரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.மற்ற மாநிலங்களை விட, டில்லி அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள மோசமான சுற்றுச்சூழலும் ஒரு காரணமா?அதுவும் ஒரு முக்கிய காரணம்தான். ஏற்கனவே அங்கு மக்கள் தொகையும், நெருக்கமும் அதிகம்.

அதனால் தொற்று அதிகரித்து, சுவாசப்பிரச்னை ஏற்படுகிறது. அங்கு மட்டுமல்ல, இதுபோல் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களிலும், தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட இதுதான் காரணம்.வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இருந்தும், ஏன் இவ்வளவு நெருக்கடி?வெளிநாட்டினர் மெடிக்கல் டூரிசம் வரும் அளவுக்கு, தமிழகத்தில் மருத்துவ வசதிகள் உள்ளன. அதிக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இங்கு உள்ளன. டாக்டர்கள் மற்றும் நர்சிங் ஸ்டாப் அதிகம் உள்ளனர். தொற்று எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தாலும், நம்மால் சமாளிக்க முடியும். மக்கள் விழிப்புடன் இருந்தால், எளிதாக மீண்டு வந்து விடலாம்.ஆனால், தடுப்பூசி போட, மக்கள் மத்தியில் தயக்கம் இருக்கிறதே?கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதனால் எந்த பாதிப்பும் வராது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, இந்த இரண்டாவது அலையில் பாதிப்பு வராது. வந்தாலும், ஐ.சி.யூ., போக வேண்டிய அளவுக்கு பாதிப்பு இருக்காது.இருதய பிரச்னை, அதிக சர்க்கரை, பீபி உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?பிரச்னை இல்லை. எடுத்துக் கொள்ளலாம். ரத்தம் உறைவது சம்பந்தமாக மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் மட்டும், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். அலர்ஜி இருந்து, ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் எடுத்துக் கொண்டு இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.இந்த முறை குறைந்த வயது உடையவர்கள், அதிகம் பாதிக்கப்பட காரணம் என்ன?அலட்சியம்தான் காரணம். 40 வயது ஆண்கள் அதிகம். இந்த வயது உள்ளவர்கள் குடும்ப பொறுப்புகளை சுமப்பவர்கள். பாதிப்பு மட்டுமல்லாமல், இவர்களின் இறப்பும் அதிகமாக உள்ளது. ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனே டாக்டரை பார்க்க வேண்டும். டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வந்து விட்டால் பிரச்னை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X