பொது செய்தி

தமிழ்நாடு

முறையற்ற குடிநீர் இணைப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
அவிநாசி, : திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் அனுமதியின்றி, முறைகேடாக ஏராளமானோர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர் என்ற புகார், நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், அருகேயுள்ள பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களை உள்ளடக்கிய பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, அனுமதியற்ற, முறைகேடான குடிநீர் இணைப்பு

அவிநாசி, : திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் அனுமதியின்றி, முறைகேடாக ஏராளமானோர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர் என்ற புகார், நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதனால், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், அருகேயுள்ள பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களை உள்ளடக்கிய பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, அனுமதியற்ற, முறைகேடான குடிநீர் இணைப்பு கண்டறியப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது;அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த, அபராதம், இணைப்பு கட்டணம் என, ஒரு இணைப்புக்கு, 27 ஆயிரத்து 732 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, 520 முறையற்ற இணைப்புகள் கண்டறியப்பட்டு, முறைபடுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், 1.50 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பியதும், மீண்டும் அனுமதியற்ற இணைப்புகளை கண்டறிந்து முறைப்படுத்தும் பணி துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X