அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோட்டை' யாருக்கு? இன்று மாலைக்குள் முடிவு தெரியும்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், அ.தி.மு.க., 'கோட்டை'யாகுமா அல்லது தி.மு.க., 'கோட்டை' கட்டுமா என்று, இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரியவரும். திருப்பூர் மாவட்டத்தில், எட்டு தொகுதிகள் உள்ளன. தாராபுரத்தை பா.ஜ.,வுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க., இதர ஏழு தொகுதிகளிலும் போட்டியிட்டது. திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., பல்லடம் -

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், அ.தி.மு.க., 'கோட்டை'யாகுமா அல்லது தி.மு.க., 'கோட்டை' கட்டுமா என்று, இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரியவரும்.

திருப்பூர் மாவட்டத்தில், எட்டு தொகுதிகள் உள்ளன. தாராபுரத்தை பா.ஜ.,வுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க., இதர ஏழு தொகுதிகளிலும் போட்டியிட்டது. திருப்பூர் தெற்கு, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., பல்லடம் - ம.தி.மு.க., உடுமலை - காங்., அவிநாசி - ஆதித்தமிழர் பேரவை, திருப்பூர் வடக்கு - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு ஒதுக்கியது.கடந்த சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம், தாராபுரம் தொகுதிகளை தவிர இதர தொகுதிகளை அ.தி.மு.க., வென்றது. மடத்துக்குளத்தில் தி.மு.க., தாராபுரத்தில் காங்., ஆகியன வென்றன.

அ.ம.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி, ம.நீ.ம., நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.ஓட்டு வங்கி கணக்குஜெ., கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத இந்த தேர்தல், திருப்பூர் மாவட்டத்தில், அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி கணக்கில், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.அவிநாசி தொகுதியில், மீண்டும் சபாநாயகர் தனபாலும், உடுமலை தொகுதியில், மீண்டும் அமைச்சர் ராதாகிருஷ்ணனும் களமிறங்கினர். பா.ஜ., மாநில தலைவர் முருகன் களம் இறங்கியதால், தாராபுரம், வி.ஐ.பி., தொகுதியானது.

காங்கயத்தில், முன்னாள் அமைச்சர் சாமிநாதன், தி.மு.க., சார்பில் களமிறங்கினார்.திருப்பூர் தெற்கில் எம்.எல்.ஏ., குணசேகரனும், வடக்கில் எம்.எல்.ஏ., விஜயகுமாரும் அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் களமிறங்கினர்; மடத்துக்குளத்தில் தி.மு.க., வேட்பாளராக எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் போட்டியிட்டார். இத்தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேல் களமிறங்கினார்.திருப்பூர் தெற்கில், தி.மு.க., வேட்பாளராக முன்னாள் மேயர் செல்வராஜூம், அ.ம.மு.க., வேட்பாளராக முன்னாள் மேயர் விசாலாட்சியும் களம் கண்டனர்.பல்லடம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆனந்தன் போட்டியிட்டார்.பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம், தாராபுரத்தில் நடந்தது. இதேபோல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மாவட்டம் முழுக்க, பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.முடிவு எப்படி இருக்கும்!திருப்பூர் மாவட்ட தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்டம், தங்கள் கோட்டை என்பதை அ.தி.மு.க., நிரூபிக்குமா அல்லது தி.மு.க., கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வலிமையை காட்டுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X