பொது செய்தி

இந்தியா

பொருளாதார பாதிப்பில்லை: ஆறுதலான தகவல்

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :'கொரோனாவின் இரண்டாவது அலையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்காது; அதே சமயம்,மக்களின் ஆரோக்கிய பராமரிப்பில் மிகப் பெரிய அதிர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு ஏப்ரலில், கொரோனா காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தொழிற்சாலைகள், நிறுவனங்கள்,
பொருளாதாரம், வளர்ச்சி,ஆறுதல், நிபுணர்கள், மக்கள் நிம்மதி

புதுடில்லி :'கொரோனாவின் இரண்டாவது அலையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்காது; அதே சமயம்,மக்களின் ஆரோக்கிய பராமரிப்பில் மிகப் பெரிய அதிர்ச்சியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், கொரோனா காரணமாக, நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. உற்பத்தி முடங்கியதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது.இந்தாண்டின், கொரோனா இரண்டாவது அலை, முற்றிலும் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை, ஊரடங்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அந்தந்த மாநில அரசுகளுக்கு தரப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, ஊரடங்கின் போது தொழில்கள் முடங்கியதால் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்த மாநில அரசுகள், இம்முறை மிக எச்சரிக்கையாக, பகுதி நேர ஊரடங்கை அறிவித்து இருக்கின்றன. கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் குறுகிய கால முழு ஊரடங்கை அறிவித்து, அதை தேவைக்கேற்ப நீட்டித்து வருகின்றன.தடுப்பூசி மருந்துஇதன் காரணமாக, தொழிற்சாலைகள் தடையின்றி இயங்குகின்றன. தயாரிப்பு துறை சுணக்கமின்றி செயல்படுகிறது. பொழுதுபோக்கு, விருந்தோம்பல், சுற்றுலா உள்ளிட்ட ஒரு சில துறைகள் தவிர்த்து, பெரும்பாலான துறைகளைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இதற்கு, கொரோனா தடுப்பூசி மருந்தும் முக்கிய காரணம் எனலாம். கடந்த ஆண்டு, தடுப்பூசி மருந்து இல்லாத நிலையில், முழு ஊரடங்கு தான் வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஒரே தீர்வாக இருந்தது. தற்போது, 15 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மேலும் பல தடுப்பூசி மருந்துகள் சந்தைக்கு வர உள்ளன. அதனால், ஜூன் முதல், தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், கொரோனா பரவல் குறையும்.''இது, தயாரிப்பு, விவசாயம், வலைதளம் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட துறைகளின் எழுச்சிக்கு உதவும்.


சூடு பிடிக்கிறது''அத்துடன், மக்களின் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதாக பாதிக்கப்படாது,'' என, 'நோமுரா' நிறுவனத்தின், பொருளாதார வல்லுனர்களான சோனர் வர்மா, ஆரோதீப் நந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.'மின்ட்' நிறுவனத்தின் ஆய்வுக் குழு, கடந்த மார்ச்சில் வெளியிட்ட புள்ளி விபரம், நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு திரும்புவதை தெரிவிக்கிறது. பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதற்கான, 16 பிரிவுகளில், ஏழு மட்டுமே, பின்னடைவுக்கான சிவப்பு குறியீட்டைக் கொண்டிருந்தன. ஐந்து பிரிவுகள், வளர்ச்சிக்கான பச்சை குறியீட்டையும், இதர பிரிவுகள் சமநிலையிலும் காணப்பட்டன. இவை, 2020 ஏப்ரலுக்குப் பின் காணப்பட்ட மிகச் சிறந்த முன்னேற்றம்.எனினும், நுகர்வோர் பிரிவில், டிராக்டர் விற்பனை மட்டுமே நன்கு இருந்தது.

ஒட்டுமொத்த வாகன விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி இருந்தது. கொரோனாவின் இரண்டாவது அலை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும், மக்களின் ஆரோக்கியப் பராமரிப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்மை, மருந்துகளுக்கு தட்டுப்பாடு போன்றவை, கடந்த ஆண்டை விட, தனி மனிதரின் சுகாதாரத்தில் கடுமையான பாதிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில், உலக நாடுகள் இந்தியாவுக்கு தாராளமாக உதவி செய்ய முன்வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.இவ்வாறு அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்புகடந்த, 2020 மார்ச்சுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு மார்ச்சில், ஏற்றுமதியின் ஆண்டு வளர்ச்சி, 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், நவரத்தினங்கள், தங்க ஆபரணங்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சி குறைந்திருந்தது. அதிக அளவில் தொழிலாளர்களைச் சார்ந்துள்ள இத்துறைகளின் ஏற்றுமதி வளர்ச்சி, 2019 மார்ச் முதல், 1.3 சதவீதம் குறைந்துள்ளது.இது, தொழிலாளர் சந்தை இன்னும் நெருக்கடியில் உள்ளதை காட்டுவதாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப தாமதமாகும். கொரோனா பரவலை உடனடியாக தடுக்கத் தவறினால், சரக்கு சப்ளையில் இடர்ப்பாடு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, ரிசர்வ் வங்கி அச்சம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
02-மே-202112:03:09 IST Report Abuse
g.s,rajan the Economic situation is very grim and It is very much pathetic in the people's Part.It is very very difficult to survive nowadays.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
02-மே-202110:49:01 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மீண்டும் நாடுதழுவிய ஊரடங்கு போட அவசியம் இருக்காது என்று நம்புவோம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
02-மே-202106:46:47 IST Report Abuse
Darmavan இது பற்றி எந்த எதிர் கட்சிகளும் வாய் திறக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X