பொது செய்தி

தமிழ்நாடு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : நேற்று முதல்,18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று, திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில், 18 வயதை கடந்தவருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த ஆரம்ப கட்ட பணியும் துவங்கவில்லை. வழக்கமாக (45 வயதுக்கு மேற்பட்டோருக்காக) செயல்படும் இரு

திருப்பூர் : நேற்று முதல்,18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று, திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில், 18 வயதை கடந்தவருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த ஆரம்ப கட்ட பணியும் துவங்கவில்லை. வழக்கமாக (45 வயதுக்கு மேற்பட்டோருக்காக) செயல்படும் இரு தடுப்பூசி மையங்களிலும் கூட்டம் குறைவாக இருந்தது.அரசு மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்த போது,' மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி குறித்து, எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. இருப்பில் இருக்கும் தடுப்பூசி ஏற்கனவே கூறியபடி, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த இளைஞர்களிடம் நிலையை விளக்கி, திருப்பி அனுப்பினோம்,' என்றனர்.மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தவிர மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சியின் நகர் நல மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தடுப்பூசி போட வருவோரை இன்று போய் நாளை வா என திருப்பி அனுப்பி வருகின்றனர். இச்சூழலில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்காதது பலரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X