பொது செய்தி

தமிழ்நாடு

சித்தா சிகிச்சை பெற்ற 16 பேர் டிஸ்சார்ஜ்!

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : காந்திபுரம், சித்தா மையத்தில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். காந்திபுரத்தில் உள்ள சீனிவாச கல்யாண மண்டபத்தில், கடந்த மாதம் 19ம் தேதி பிரத்யேக சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இங்கு, சித்தாவில் விருப்பமுள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு 50 படுக்கை வசதிகள்

கோவை : காந்திபுரம், சித்தா மையத்தில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

காந்திபுரத்தில் உள்ள சீனிவாச கல்யாண மண்டபத்தில், கடந்த மாதம் 19ம் தேதி பிரத்யேக சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இங்கு, சித்தாவில் விருப்பமுள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தினமும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.இதன் மூலம், கடந்த 12 நாட்களில் 16 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஆயுர்வேத மற்றும் கொரோனா கூடுதல் ஒருங்கிணைப்பு அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது:இம்மையத்தில் தற்போது, 25 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, புல் தைலம் கலந்த நீரில் ஆவி பிடிக்கும் வசதி, சித்தா மூலிகை மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து, காலையில் கபசுர குடிநீர், மதியம் நேச்சுரோபதியில் தயாரிக்கப்பட்ட இம்யூனிட்டி பூஸ்டர், மாலை மூலிகை டீ, இரவு நேரம், உணவுடன் கூடிய சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து, 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஆர்.டி.பி.சி.ஆர்., முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் நெகட்டிவ் என் வந்தால், உடனே டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.

எனினும், டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகள் வீட்டில், 5 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செல்லும் நோயாளிகளுக்கு, அமுக்ராசூரணம் மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீர் அடங்கிய, 'ஆரோக்கியம் கிட்' வழங்கப்படுகிறது. இதுவரை, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் யாருக்கும் பக்கவிளைவுகளோ, வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X