தமிழ்நாடு

திக்...திக்...திக்...! கொரோனா டெஸ்ட் முடிவு .... தாமதிப்பதால் அச்சம்

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கோவையில், கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு, அதன் முடிவுகளை சொல்ல, இரு நாட்கள் தாமதிப்பதால், திக்... திக்... மனநிலையில் பரிதவிப்புடன் இருக்கின்றனர். ஆய்வக வசதிகளை அதிகப்படுத்தாமல், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. கோவை நகர் பகுதிக்கு உட்பட்ட, 100 வார்டுகளில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், புறநகர் பகுதிகளில்
 திக்...திக்...திக்...! கொரோனா டெஸ்ட் முடிவு .... தாமதிப்பதால் அச்சம்

கோவை : கோவையில், கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு, அதன் முடிவுகளை சொல்ல, இரு நாட்கள் தாமதிப்பதால், திக்... திக்... மனநிலையில் பரிதவிப்புடன் இருக்கின்றனர். ஆய்வக வசதிகளை அதிகப்படுத்தாமல், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை நகர் பகுதிக்கு உட்பட்ட, 100 வார்டுகளில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், புறநகர் பகுதிகளில் பொது சுகாதாரத்துறையினரும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். மாநகராட்சி சார்பில், நாளொன்றுக்கு, 50க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடத்தி, 5,000 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் 58 இடங்களில் முகாம் நடத்தி, 4,650 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதேநேரம், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டது.3,208 முகவர்களிடம் சேகரிக்கப்பட்ட சளி மாதிரியை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மட்டுமே பரிசோதிக்க வேண்டும். ஒரே நாளில் முடிவு சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதற்கேற்ப, ஆய்வக வசதியை அதிகப்படுத்தாமல் இருந்ததால், முடிவுகளை சொல்ல முடியாமலும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய முடியாமலும், ஊழியர்கள் அவதிப்பட்டனர். ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வருவோரும், கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, பரிசோதனை செய்து கொண்ட ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக சான்று வழங்க முடியாமல் அவதிப்பட்ட சுகாதாரத்துறையினர், அரசு துறை உயரதிகாரிகள் வசம், மொத்தமாக பட்டியல் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், வார்டு வார்டாகச் சென்று, பொதுமக்களிடம் சேகரித்த சளி மாதிரியை ஆய்வு செய்யும் பணி தேங்கியதால், அப்பொறுப்பு, அரசு மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. 4,000க்கும் மேற்பட்ட மாதிரி இருந்ததால், உடனடியாக பரிசோதித்து, முடிவு சொல்ல முடியாமல், ஆய்வக ஊழியர்கள் பரிதவித்தனர். கோவை மாவட்டத்தில், 21 ஆய்வக வசதி இருப்பதாக, ஒவ்வொரு நாளும், கலெக்டர் நாகராஜன் தகவல் தெரிவிக்கிறார். ஆனால், அரசு தரப்பில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகளை உடனுக்குடன் பரிசோதித்து முடிவு சொல்வதற்கு, அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி ஏற்படுத்தாமல், பொது சுகாதாரத்துறை உயரதிகாரிகள் கோட்டை விட்டுள்ளனர்.

சளி மாதிரி சேகரித்த மையத்தில் விசாரித்தால், 'சளி மாதிரி அதிகமா இருக்குங்க. திங்கட் கிழமைதாங்க 'ரிசல்ட்' கிடைக்கும்' என்றனர்.அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், 'டெஸ்ட்' எடுத்த பொதுமக்கள், 'நமக்கு பாசிட்டிவ்ன்னு சொல்லிடுவாங்களோ' என்கிற பயத்தோடு, இரு நாட்களாக திக்... திக்... மனநிலையில் இருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X