தமிழ்நாடு

பக்...பக்...பக்...! 137 வேட்பாளர்கள் .... காத்திருப்புக்கு இன்று முடிவு

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில், 21 லட்சம் வாக்காளர்கள் செலுத்திய ஓட்டுக்களை எண்ணும் பணி, இன்று காலை 8:00 மணிக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்குகிறது. 26 நாள் காத்திருப்புக்கு இன்று முடிவு வந்து விடும் என்பதால், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், திக்...திக்...மனநிலையில் இருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க.,- தி.மு.க.,- பா.ஜ.,- காங்.,- கம்யூ.,-

கோவை : கோவை மாவட்டத்தில், 21 லட்சம் வாக்காளர்கள் செலுத்திய ஓட்டுக்களை எண்ணும் பணி, இன்று காலை 8:00 மணிக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்குகிறது. 26 நாள் காத்திருப்புக்கு இன்று முடிவு வந்து விடும் என்பதால், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், திக்...திக்...மனநிலையில் இருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க.,- தி.மு.க.,- பா.ஜ.,- காங்.,- கம்யூ.,- அ.ம.மு.க., - மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 137 பேர் போட்டியிட்டனர்.தமிழக அரசியலில், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் பெற்றுள்ள முக்கியத்துவம் கருதி, பிரதமர் மோடியில் தொடங்கி, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இங்கு பிரசார களம் இறங்கினர்.முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆகியோர், மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும், வெவ்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.

தெற்கு தொகுதியில் களம் இறங்கிய கமல், கோவையை தன் முகாமாக வைத்துக்கொண்டு, இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும், பிரசாரத்துக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அடுத்தடுத்து குறி வைத்ததால் கோவை தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. முடிவில், ஏப்.,6ல் நடந்த தேர்தலில், மொத்த வாக்காளர்கள் 30,82,028 பேரில் 21,05673 பேர் ஓட்டளித்தனர்.ஆண்களில் 10,49,917 பேரும், பெண்களில் 10,55,653 பேரும், மூன்றாம் பாலினத்தவரில் 103 பேரும் ஓட்டு பதிவு செய்தனர்.ஓட்டுக்கள் பதிவு செய்யப் பட்ட மின்னணு இயந்திரங்கள், ஜி.சி.டி., யில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை திறந்து எண்ணும் பணி, இன்று காலை நடக்கிறது.இதற்கென பணி நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவரும், காலை 5:00 முதல் 6:00 மணிக்குள், ஜி.சி.டி.,க்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை, தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை நடக்கும். அதன் முடிவில், சரிபார்ப்பு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணி சரி பார்க்கப்படும்.இதற்கென, தொகுதிக்கு ஐந்து ஓட்டுச்சாவடிகள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும், ஓட்டு இயந்திர எண்ணிக்கைக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால், ஒப்புகைச் சீட்டில் வரும் முடிவே இறுதியானது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடந்த நாளுக்கும், ஓட்டு எண்ணிக்கை நாளுக்கும் இடையிலான 26 நாட்களை, தினமும் ஒரு யுகம் போல, வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் கழித்தனர். திக்...திக்...மனநிலையுடன் இருந்த அவர்களது காத்திருப்புக்கு, ஓட்டு எண்ணிக்கை தினமான இன்று முடிவுக்கு வரப்போகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X