ஏழு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஏழு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்!

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
ஏழு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்!தமிழகத்தில் ஆட்சி அமைக்கக் கூடிய புதிய அரசுக்கு ஏற்படக் கூடிய தொழில் துறை சவால்கள் குறித்துக் கூறுகிறார், 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம்: புதிய நிறுவனத்துக்கான ஒப்புதல் கொடுப்பதில் வெளிப்படை தன்மை வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு, 'டீம்டு அப்ரூவல்' முறைப்படி ஒப்புதல்

சொல்கிறார்கள்


ஏழு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்!தமிழகத்தில் ஆட்சி அமைக்கக் கூடிய புதிய அரசுக்கு ஏற்படக் கூடிய தொழில் துறை சவால்கள் குறித்துக் கூறுகிறார், 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம்: புதிய நிறுவனத்துக்கான ஒப்புதல் கொடுப்பதில் வெளிப்படை தன்மை வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு, 'டீம்டு அப்ரூவல்' முறைப்படி ஒப்புதல் கொடுக்கப்படுகிறது.
இதன்படி, விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள், அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும். இறுதி ஒப்புதலுக்காக அதிகாரிகளிடம் செல்லும்போது, அவர்கள், 'கேட்டதை' செய்யவில்லை எனில், விண்ணப்பத்தை ரத்து செய்கின்றனர். மேற்கண்ட பிரச்னையை, வரக் கூடிய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வந்தால், அவர்களுக்கு ஏற்ற வகையில், வீட்டு வசதி, தொழில் வசதி, உணவகங்கள், பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.
தொழில் முனைவோரை, உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும். 'இன்னொவேஷன் எக்கோ சிஸ்டம்' என்ற, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய புதுமைகளை கண்டறிய, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளுடன் இணைந்து, புதிய திட்டங்களை வகுப்பது, காலத்தின் தேவை.
புதிய துறைகளை உருவாக்கி, அதற்கான தொழில் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும். விண்வெளி பாதுகாப்பு, உணவு பதப்படுத்துதல், விவசாயப் பொருட்கள், மின்னணு கணினி வடிவமைப்பு, மருத்துவ மின்னணு சாதனங்கள், மின்னணு வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி தயாரிப்பு.
உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்தக துறை, நவீனமயமாக்கப்பட்ட ஜவுளி துறை ஆகிய ஏழு துறைகளை உருவாக்க வேண்டியது அவசியம்; இவை எழுச்சி பெறும் துறைகள்.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, ஒரே குடையின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது போல, தொழில் முனைவோரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அவர்களை பல துறை கல்லுாரிகளிலிருந்து மீட்டெடுத்து, உற்பத்தி துறையை மேம்படுத்த வேண்டும்.தென் மண்டலங்களில் உள்ள பல ஊர்களை நகரங்களாக மாற்றி, அங்கு முதலீடுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.


வாள் வீசும்போது உற்சாகம் பிறந்து விடும்!வாள் வீச்சு போட்டிகளில் பல பரிசுகள் வென்று வருவது பற்றி, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பவானி தேவி: சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள முருக தனுஷ்கோடி உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாள் வீச்சு பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றேன். காரணம், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, வாள் வீச்சு போன்ற சில விளையாட்டுகளை தமிழக அளவில் உள்ள பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார். அது பற்றி அப்போது எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் நான் அதில் சேர்ந்தேன். பிறகு எனக்கு அந்த பயிற்சியில் ஆர்வமும், துடிப்பும் ஏற்பட்டது. வாள் வீசும்போது ஓர் உற்சாகம் பிறந்தது. அதனால் தொடர்ந்து அந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன்.இதுவரைக்கும், 100க்கும் மேற்பட்ட வாள் வீச்சு போட்டி களில் பங்கேற்றுஇருக்கிறேன்.என் எல்லா வெற்றிக்கும் முக்கிய காரணம், என் அம்மா ரமணி தான். 2016ல் ஜெயலலிதாவை சந்தித்து உதவி கேட்டோம். அவர்கள் கொடுத்த நிதி உதவியால்
நிறைய பயிற்சிகளில் பங்கேற்றேன். சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடிந்தது. அவரின் உதவி எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது. அவர் காலத்துக்கு பின், சில பயிற்சிகளில் பங்கேற்க முடியாத அளவுக்கு எங்களுக்கு நிறைய தடைகள் வந்தன. எல்லாவற்றையும் என் அம்மா தனியாளாக இருந்து எதிர்கொண்டார்; தமிழக அரசும் உதவி செய்கிறது. சிறு வயதிலேயே வாள் வீச்சு பயிற்சியில் ஈடுபட்டதால் பயமே இல்லை. அடிபடும் என்பதைப் பற்றி கவலைப்படவே இல்லை. ஆபத்தான விளையாட்டு என்பதையெல்லாம் தாண்டி, நான் தொடர்ந்து அதிலேயே ஈடுபட்டு கொண்டிருந்தேன். அந்த ஆர்வம் இன்னும் அதிகமாகி நேஷனல், இன்டர்நேஷனல் போகணும். ஜெயிக்கணும் என்ற எண்ணம் அதிகமாகியபடி இருந்தது. வேற எந்த, 'நெகட்டிவ்' எண்ணமும் வரவேயில்லை. இயல்பாகவே நான் தைரியமான பெண். 17 வயதிலிருந்தே தனியாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க துவங்கி விட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
அங்கு போய், 'கோச்சர்' கூட பயிற்சி எடுப்பதாகட்டும், இன்டர்நேஷனல் போட்டியாளர்களுடன் பயிற்சி எடுப்பதாகட்டும் எல்லாமே புதிதாக இருந்தது. அது என்னை நானே தயார் செய்து கொள்ள உதவியது. இப்ப அது எல்லாம் அத்துப்படியாகி, உறுதி யான பெண்ணாக உள்ளேன்.நான் தொடர்ந்து பல போட்டிகளில் பரிசுகளை பெற்ற பிறகு தான், எனக்கு மரியாதை கிடைக்கத் துவங்கியது. இப்போது இந்தியா, வாள் வீச்சு விளையாட்டில் முன்னணி நாடாக இருக்கிறது என்று வியந்து பார்க்கின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X