பொது செய்தி

தமிழ்நாடு

கட்சியெல்லாம் அப்புறம்; நட்புதான் முக்கியம்!

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கோவை ஜி.சி.டி.,யில், 26 நாட்கள், இரவும் பகலுமாக ஓட்டு இயந்திரங்களுக்கு காவல் இருந்த அரசியல் கட்சிகளின் முகவர்கள், நேற்று பணி முடித்து, ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்தனர். ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், ஓட்டுப்பெட்டிகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கும் இருக்கிறது. ஓட்டுப்பெட்டிகள்,

கோவை : கோவை ஜி.சி.டி.,யில், 26 நாட்கள், இரவும் பகலுமாக ஓட்டு இயந்திரங்களுக்கு காவல் இருந்த அரசியல் கட்சிகளின் முகவர்கள், நேற்று பணி முடித்து, ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்தனர்.

ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், ஓட்டுப்பெட்டிகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கும் இருக்கிறது. ஓட்டுப்பெட்டிகள், இயந்திரங்களாக மாறி, கண்காணிப்புக்கு போலீசாருடன் கேமராக்களும் வந்த காலத்திலும், இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இப்படி காவலுக்கு வரும் கட்சிக்காரர்கள், நாள் முழுவதும் தங்கள் சொந்தக்கதை, சோகக்கதையை பேசியபடி, ஓட்டு எண்ணிக்கை மையங்களில், பொழுதை கழிப்பது வழக்கம். முடிவில், கட்சியை கடந்த நட்பு ஏற்பட்டு விடுவது தவிர்க்க முடியாதது.

இப்படித்தான், கடந்த 26 நாட்களாக, கோவை ஜி.சி.டி.,யில், காவல் இருந்த வெவ்வேறு கட்சிகளின் முகவர்களுக்கு, இடையே பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.தி.மு.க.,- அ.தி.மு.க.,- பா.ஜ.,- கம்யூ.,- காங்.,- அ.ம.மு.க.,- நாம் தமிழர்- மக்கள் நீதி மய்யம் என கட்சி வித்தியாசம் இன்றி, முகவர்கள் பேசிப்பழகி, தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.அரசியல் ரீதியாக எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும், ஒருவருக்கு வரும் உணவை, இன்னொருவர் சாப்பிடுவது, குடும்ப நலன் பற்றி விசாரிப்பது எல்லாம் நடந்தது.

இப்படி பழகிக் கொண்டிருந்த நண்பர்களின் பணி, நேற்றுடன் முடிவுக்கு வந்தது.இதையடுத்து, அனைவரும் பிரியாவிடை கொடுத்து, 'குரூப் போட்டோ'வும் எடுத்துக்கொண்டு, மையத்தில் இருந்து புறப்பட்டனர்.பி.கு: முகவர்கள் பலரும் சரியாக முகக்கவசம் அணியாமலே பழகி வந்தனர். கடைசி நாளான நேற்று புகைப்படம் எடுக்க கூடியபோதும், முகக்கவசத்தை மறந்து போயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X